டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒன்றரை நிமிடத்துக்குள் விசாரணை.. சபாநாயகர் நோட்டீஸுக்கு இடைக்கால தடை.. உச்சநீதிமன்றம் அதிரடி

Google Oneindia Tamil News

Recommended Video

    3 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்... உச்ச நீதிமன்றம் அதிரடி தடை!

    டெல்லி: அதிமுகவை சேர்ந்த 3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு வெறும் ஒன்றரை நிமிடத்தில் விசாரணை நடத்தப்பட்டு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

    அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூன்று பேர் கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சபாநாயகரிடம் கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார்.

    அந்த புகாரின் அடிப்படையில் எம்எல்ஏக்கள் 3 பேரும் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த விளக்கம் ஏற்றுக் கொள்ளும்படி இல்லாத பட்சத்தில் 3 பேரும் தகுதி நீக்கம் செய்யப்படுவர் என தெரிகிறது.

    3 அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்.. சபாநாயகரின் நோட்டீஸுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி தடை! 3 அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்.. சபாநாயகரின் நோட்டீஸுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி தடை!

    வழக்கு

    வழக்கு

    இதனிடையே சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பேரவைச் செயலாளரிடம் திமுக மனு அளித்துள்ளது. மேலும் சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து இருவர் (கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு தவிர்த்து) உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    விசாரணை

    விசாரணை

    அதில் சபாநாயகர் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    இடைக்காலத் தடை

    இடைக்காலத் தடை

    அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒன்றரை நிமிடத்தில் விசாரணையை நடத்தினர். பின்னர் அந்த நேரத்துக்குள் சபாநாயகரின் நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    தடை உத்தரவு

    தடை உத்தரவு

    பொதுவாக எல்லா வழக்குகளும் குறைந்தது ஒரு மணிநேரமாவது வாதி, பிரதிவாதி வாதாடுதல் நடைபெறும். ஆனால் இந்த வழக்கை பொருத்தவரை வெறும் ஒன்றரை நிமிடத்துக்குள் விசாரணை நடத்தி தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அமமுகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    English summary
    Supreme Court hears ADMK MLAs case within one and half minutes.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X