டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை- சேலம் 8 வழி சாலை திட்டம் என்னவாகும்?இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: சென்னை- சேலம் இடையேயான 8 வழி சாலை திட்டம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

சென்னை- சேலம் இடையே ரூ10,000 கோடி மதிப்பீட்டில் 8 வழி சாலை திட்டம் அமைக்கப்பட்டது. இதற்காக சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கின.

டிசம்பர் 9-ம் தேதி சோனியா பிறந்தநாள்.. சர்வமத பிரார்த்தனைகள் நடத்துங்கள்.. K.s.அழகிரி வேண்டுகோள்..!டிசம்பர் 9-ம் தேதி சோனியா பிறந்தநாள்.. சர்வமத பிரார்த்தனைகள் நடத்துங்கள்.. K.s.அழகிரி வேண்டுகோள்..!

ஹைகோர்ட்டில் வழக்கு

ஹைகோர்ட்டில் வழக்கு

ஆனால் இந்த 8 வழி சாலை திட்டத்தால் விளை நிலங்கள், நீர்நிலைகள், மலைகள் அழிக்கப்படும் என்பதால் பொதுமக்கள் கடுமையாக எதிர்த்து போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பல்வேறு அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன.

ஹைகோர்ட் தடை

ஹைகோர்ட் தடை

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த ஆண்டு ஏப்ரல் 8-ந் தேதியன்று 8 வழிசாலை திட்டத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்த தடை உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தேசிய நெடுஞ்சாலை துறை, தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

உச்சநீதிமன்றத்தில் விசாரணை

உச்சநீதிமன்றத்தில் விசாரணை

இந்த வழக்கை நீதிபதி கான்வில்கர் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. கடந்த அக்டோபர் 2-ந் தேதி இந்த வழக்கு விசாரணையில் எதிர்மனுதாரர்கள் எழுத்துப்பூர்வமான வாதங்களையும் இதற்கு மத்திய அரசு விளக்கத்தை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

இந்த நிலையில் இவ்வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. இந்த தீர்ப்பை தொடர்ந்து 8 வழிசாலை திட்டம் தொடருமா? இல்லையா? என்பது தெரியவரும்.

English summary
The Supreme Court will deliver its verdict in Chennai- Salme EightLane Expressway Case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X