ஆதார்- வாக்காளர் அட்டை இணைப்புக்கு எதிரான வழக்கு- டெல்லி ஹைகோர்ட்டை நாட உச்சநீதிமன்றம் அட்வைஸ்
டெல்லி: ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர் ரந்தீப்சிங் சுர்ஜிவாலா டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடலாம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது. இதனடிப்படையில் ஆதார், வாக்காளர் அடையாள அட்டைகள் இணைப்பு பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் போலி வாக்காளர் அடையாள் அட்டையை தடுக்க முடியும் என்கிறது தேர்தல் ஆணையம்.

ஆனால் ஆதார் என்பது ஒரு இருப்பிடத்துக்கான சான்றிதழ்; அது ஒன்றும் குடியுரிமையை உறுதி செய்கிற சான்றிதழ் அல்லது அடையாள அட்டை கிடையாது. ஆதார் அடிப்படையில் வாக்காளர் அடையாள அட்டையை இணைத்தால் குடிமக்கள் அல்லாதவர்களுக்கும் வாக்குரிமை அளிக்கப்படும் நிலைமை உருவாகும் என்பது காங்கிரஸின் கருத்து. அதேபோல் திமுக, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, பகுஜன் சமாஜ் கட்சிகளும் இந்த சட்டத்தை எதிர்த்தன.
மேலும் மத்திய அரசின் இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரந்தீப் சுர்ஜிவாலா, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது, மனுதாரர் தரப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடலாம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.












Click it and Unblock the Notifications