ராமர் சேது பாலம்: சுப்பிரமணியன் சுவாமியின் மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம்.. மார்ச் 9 இல் விசாரணை
டெல்லி: ராமர் சேது பாலத்தை தேசிய புராதனச் சின்னமாக அறிவிக்கக் கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ராமேஸ்வரம் தீவு அல்லது பாம்பன் தீவில் உள்ளது ராமர் சேது பாலம். இதை ஆடம்ஸ் பாலம் என்றும் அழைப்பதுண்டு. தமிழகத்தின் தென்கிழக்கு கரையிலும் இலங்கைக்கு வட மேற்கு கரையிலும் இருக்கிறது.

மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி இடையே 83 கி.மீ. கடல் பகுதியை ஆழப்படுத்தி, கப்பல்கள் சென்று வரும் வகையில் பாதை அமைக்க சேது சமுத்திர திட்டம் உருவாக்கப்பட்டது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்தியா- இலங்கை இடையே புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ராமர் சேது பாலம் இந்த திட்டத்தால் சேதமடையும் என்பதால் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என பல தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள். இதுகுறித்து 2007 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்குத் தொடர்ந்தார்.
இந்த நிலையில் சேது சமுத்திர திட்டத்தை கைவிடுவதாக அப்போதிருந்த மத்திய அரசே அறிவித்தது. மேலும் இந்த திட்டத்தால் சமூக பொருளாதார தீமைகளை கருத்தில் கொண்டு கப்பல் பயணிக்கும் பாதையை வேறு இடத்தில் அமல்படுத்த விரும்புவதாக தெரிவித்தது.
மேலும் ராமர் சேது பாலத்தை தேசிய புராதனச் சின்னமாக அறிவிக்க கோரி சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் உள்ள நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமும் இதுகுறித்து விசாரிக்குமாறு சுப்பிரமணியன் சுவாமி அப்போதிருந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ் ஏ பாப்டே முன்பு கோரினார்.
அவர் ஓய்வு பெற சில நாட்களே உள்ளதால் அந்த வழக்கை தனக்கு பின்னர் பதவியேற்கும் தலைமை நீதிபதி ரமணா விசாரிப்பார் என பாப்டே தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி ரமணாவிடம் இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இது முக்கியமான விவகாரம் என்பதால் கவலையாக உள்ளது என தெரிவித்திருந்தார்.
இதை புரிந்து கொண்ட தலைமை நீதிபதி, இந்த வழக்கிற்கு மத்திய அரசு ஏதாவது பதில் அளித்துள்ளதா என கேள்வி எழுப்பினார். அதற்கு " கடந்த காலங்களில் மத்திய அரசு வாக்கு மூலங்களை அளித்துள்ளது என சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டார். இதையடுத்து வரும் மார்ச் 9 ஆம் தேதி ராமர் சேது பாலத்தை தேசிய புராதனச் சின்னமாக அறிவிக்கக் கோரும் மனு விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
-
விஜய்க்கு முதல் அக்னி பரீட்சை.. காரணம் வேற யாரும் இல்லை காங்கிரஸ் தான்.. அடுத்து என்ன? -
பாடம் கற்காத மத்திய அரசு.. நீட் லீக் விவகாரத்தில் வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்.. பின்னணி! -
தமிழ்நாடு 69% இட ஒதுக்கீடு.. உச்சநீதிமன்றத்தில் இன்று முக்கிய விசாரணை.. விஜய்க்கு பெரிய சவால் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications