டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடேங்கப்பா சூப்பர்ங்க! நல்ல ஐடியாவ இருக்கே.. ஆனந்த் மகிந்திராவை வியக்க வைத்த வில்லேஜ் தொழில்நுட்பம்!

Google Oneindia Tamil News

டெல்லி: மேல் தளத்தில் நடைபெறும் கட்டுமான பணிக்கு தேவையான பொருட்களை எடுத்துச்செல்ல ஸ்கூட்டர் மூலம் புதுமையான முறையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய கட்டுமான தொழிலாளர்களின் செயலை ஆனந்த மகிந்திரா பாராட்டி தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவில் மிகவும் பிரபலமான தொழில் நிறுவனங்களில் ஒன்று மகிந்திரா குழுமம்.

இந்த நிறுவனத்தின் தலைவராக இருக்கும் ஆனந்த் மகிந்திரா, சமூக வலைத்தளங்களிலும் அடிக்கடி தனக்கு பிடித்த சுவராசியமான தகவல்களை பகிர்ந்து வருகிறார்.

ஜஸ்ட் 10 ரூபாய்.. 6 பேர் 150 கி.மீ போகலாம்.. அசர வைத்த வண்டி.. ஆனந்தமான ஆனந்த் மகிந்திரா ஜஸ்ட் 10 ரூபாய்.. 6 பேர் 150 கி.மீ போகலாம்.. அசர வைத்த வண்டி.. ஆனந்தமான ஆனந்த் மகிந்திரா

தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திரா

தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திரா

தன்னம்பிக்கை ஊட்டும் கதைகள், எளிய பின்னணியில் இருந்தும் அசாத்திய சாதனைகளை நிகழ்த்தும் நபர்கள், கிராமப்புற இளைஞர்களின் வித்தியாசமான கண்டுபிடிப்புகள் என தனக்கு கிடைக்கும் தகவல்களை தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டு பிரபலம் அடைய வைத்து விடுவார். இயற்கை காட்சிகள், கலை நயங்கள் என தனது மனதுக்கு பிடித்த செய்திகள் எதுவாக இருந்தாலும் தனது ட்விட்டரில் பதிவிடுவதை வாடிக்கையாக ஆனந்த் மகிந்திரா கொண்டுள்ளார்.

ட்விட்டரில் பரவும் வீடியோ

ட்விட்டரில் பரவும் வீடியோ

ஆனந்த் மகிந்திராவை ட்விட்டரில் சுமார் 10 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். இதனால், அவரது பதிவுகள் பெரும்பாலும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு விடும். சமீபத்தில் கூட 6 பேர் பயணிக்கக் கூடிய இரண்டு சக்கரங்களை கொண்ட மின்சார கருவி ஒன்றை கிராமப்புற இளைஞர்கள் தயாரித்து இருந்ததை தனது ட்விட்டரில் பகிர்ந்து பாராட்டி இருந்தார். அந்த வகையில், தற்போது கட்டிட வேலை செய்யும் தொழிலாளர்கள், ஸ்கூட்டரை பயன்படுத்தி தங்கள் வேலையை எளிதாக்கும் ஒரு வீடியோ பதிவை தனது ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார்.

எளிதாகவும் வேகமாகவும் முடிக்கும் வகையில்

எளிதாகவும் வேகமாகவும் முடிக்கும் வகையில்

சில வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவில், பல மாடிகளை கொண்ட ஒரு கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டிடத்தில் மேல் பகுதியில் கட்டுமான பொருட்களை எடுத்துச்செல்ல வேண்டும் என்றால் படியேறி கொண்டு செல்ல வேண்டும். இதற்கு கூடுதல் வேலை ஆட்களும் தேவைப்படும். ஆனால் இதை எளிதாகவும் வேகமாகவும் முடிக்கும் வகையில் ஸ்கூட்டர் ஒன்றின் என்ஜினோடு கருவி ஒன்றை பொருத்தி அதில் இருந்து கயிற்றை கட்டியுள்ளனர். இந்தக் கயிறு கட்டிட வேலை நடக்கும் மாடியை ஒட்டி வைக்கப்பட்டுள்ள கப்பி (Pulley) யோடு இணைத்து வைக்கப்பட்டுள்ளது.

ஆனந்த் மகிந்திரா ட்விட்

ஆனந்த் மகிந்திரா ட்விட்

கீழே இருந்து கட்டுமான பொருட்களை கயிற்றில் கட்டி வைக்கின்றனர். ஸ்கூட்டரை இயக்கும் போது கப்பியை கயிறு இழுக்கிறது. இதனால், கட்டுமான பொருட்கள் எளிதாக மாடியை சென்றடைகின்றன. இந்த வீடியோவ தனது ட்விட்டரில் பகிர்ந்தது மட்டுமல்லாம ஆனந்த் மகிந்திரா பாராட்டியுள்ளார். ஆனந்த் மகிந்திரா தனது ட்விட்டரில் வெளியிட்டு இருக்கும் பதிவில், "வாகன என்ஜின்களை பல வழிகளிலும் பயன்படுத்த முடியும். இதனால்தான் நாம் பவர் ட்ரெயின்ஸ் என்று அதை அழைக்கிறோம். இது மின்சார ஸ்கூட்டராக இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்தியர்கள் சிறப்பானவர்கள் என கருத்து

இந்தியர்கள் சிறப்பானவர்கள் என கருத்து

ஆனந்த் மகிந்திரா இந்த பதிவை வெளியிட்ட சில மணி நேரங்களில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை கடந்துள்ளது. நெட்டிசன்கள் பலரும் இந்த பதிவுக்கு கீழே தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றன்ர். அந்த வகையில் நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "இதுபோன்ற புதுமையான சிந்தனைகளில் இந்தியர்கள் சிறப்பானவர்கள். கிடைக்கும் வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்துவதில் வல்லவர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

வேலைப்பளுவை குறைக்கிறது

வேலைப்பளுவை குறைக்கிறது

மற்றொரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், இந்தியர்களின் புதுமையான கண்டுபிடிப்புகளையும் செய்வதில் சிறந்தவர்கள் என்று இது காட்டுகிறது. தொழில்நுட்பத்தை இப்படி பயன்படுத்தி வேலைப்பளுவை குறைக்கிறது" என்று பதிவிட்டுள்ளார். இவ்வாறாக ஆனந்த் மகிந்திரா பகிர்ந்துள்ள இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் பார்த்து பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

English summary
Ananda Mahindra praised the construction workers who used the technology in an innovative way by using scooters to carry materials needed for the construction work on the upper floor and shared it on his Twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X