அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியல்.. தமிழகத்தில் களமிறங்கப்போவது யார்? முழுவீச்சில் தயாராகும் காங்கிரஸ்
டெல்லி: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழுவின் இரண்டாவது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு பின்னர் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பிருக்கிறது.
இந்த லோக்சபா தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு சவாலானதாக இருக்கிறது. எனவே இதனை எதிர்கொள்ள, இந்தியா கூட்டணியை உருவாக்கி மாநில கட்சிகளுடன் கூட்டணியை உறுதி செய்திருக்கிறது. இதனையடுத்து கடந்த 7ம் தேதியன்று காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதற்கு அடுத்த நாள் காங்கிரஸ் கட்சி தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு, மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம், தெலங்கானா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் போட்டியிடும் 39 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இவர்களில் 16 பேர் கேரளாவிலிருந்தும், 7 பேர் கர்நாடகாவில் இருந்தும், 6 பேர் சத்தீஸ்கரில் இருந்தும், 4 பேர் தெலுங்கானாவிலிருந்தும் அறிவிக்கப்பட்டனர். அதேபோல மேகாலயாவில் இருவர், நாகாலாந்து, சிக்கிம், லட்சத்தீவு, திரிபுரா ஆகிய மாநிலங்களிலிருந்து ஒருவர் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.
இந்த 39 வேட்பாளர்களில் 15 பேர் பொதுப்பிரிவை சேர்ந்தவர்கள், 24 பேர் எஸ்சி, எஸ்டி, OBC மற்றும் சிறுபான்மையினராவார்கள். இந்த பட்டியலில் போட்டியிடும் அனைவரும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் களமிறங்கப்பட்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், இன்று கட்சியின் மத்திய மத்திய தேர்தல் குழுவின் இரண்டாவது கூட்டம் நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தை தொடர்ந்து இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து பேசிய காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ், "எங்களிடம் தனியார் தேர்தல் அறிக்கை கிடையாது. ஆனால், 'பஞ்ச் நியாய்' இருக்கிறது. அதாவது இது ஒட்டுமொத்த இந்தியா கூட்டணிக்கான செயல்திட்டமாகும். அதேபோல பலரும் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று கேட்கிறார்கள். நாங்கள் கொள்கை, சித்தாந்தத்தின் அடிப்படையில்தான் தேர்தலை சந்திக்கின்றோமே தவிர, ஒரேயொரு முகத்தை காட்டி அல்ல" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications