அதிரடி பல்டி-. காங்கிரஸில் மீண்டும் இணையும் குலாம் நபி ஆசாத்? ராகுல் யாத்திரையில் பங்கேற்பு?
டெல்லி: காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி ஜம்மு காஷ்மீரில் தனிக்கட்சி தொடங்கிய குலாம்நபி ஆசாத் மீண்டும் காங்கிரஸுக்கு திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது. குலாம்நபி ஆசாத்தை மீண்டும் காங்கிரஸில் இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஜம்மு காஷ்மீரில் ராகுல் காந்தியின் யாத்திரையில் குலாம்நபி ஆசாத்தும் இணைவார் எனவும் கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவர் குலாம்நபி ஆசாத். ஜம்மு காஷ்மீரின் காங்கிரஸ் முகமாக இருந்தவர். ஒருகாலத்தில் சோனியா குடும்பத்தின் நம்பிக்கையான தூதர். தமிழகத்தில் காங்கிரஸ்- திமுக கூட்டணி இடையேயான உறவை வலுப்படுத்தியதில் மிக முக்கியப் பங்களிப்பு செய்தவர் குலாம் நபி ஆசாத்.

லோக்சபா தேர்தல்களில் தொடர் தோல்வியை சந்தித்து காங்கிரஸ். இதனைத் தொடர்ந்து சோனியா காந்தி குடும்பத் தலைமை தொடர்பான அதிருப்தி குரல்கள் காங்கிரஸில் வெடித்தன. காங்கிரஸ் கட்சிக்கு ஆக்கப்பூர்வமான தலைமை தேவை என்கிற கருத்து காங்கிரஸில் வலுவடைந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைமைக்கு 23 மூத்த தலைவர்கள் கடிதமும் அனுப்பி இருந்தனர். இந்த ஜி23 தலைவர்கள் குழுவுக்கு தலைமை வகித்தவர் குலாம் நபி ஆசாத். இதனால் சோனியா காந்தி குடும்பத்தில் இருந்து ரொம்ப தூரம் விலகிப் போனார் குலாம் நபி ஆசாத்.
ஒருகட்டத்தில் அவருக்கு மீண்டும் ராஜ்யசபா எம்பி பதவி மறுக்கபப்ட்டது. காங்கிரஸ் கட்சியின் பொறுப்புகள் பறிக்கப்பட்டன. ராஜ்யசபாவில் குலாம் நபி ஆசாத் பிரியா விடை பெற்ற போது, காங்கிரஸ் எம்பிக்கள் யாரும் சீண்ட கூட இல்லை. மாறாக பிரதமர் மோடிதான் அரவணைப்பான கருத்துகளை கூறி குலாம் நபி ஆசாத்துக்கு ஆறுதலாக இருந்தார். இதனால் குலாம் நபி ஆசாத், பாஜக பக்கம்தான் செல்லப் போகிறார் என கூறப்பட்டது. ஒரு கட்டத்தில் பாஜகவின் துணை ஜனாதிபதி வேட்பாளராக குலாம் நபி ஆசாத் முன்னிறுத்தப்படலாம் எனவும் தகவல்கள் பரவின.
இதன்பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் காங்கிரஸில் இருந்து விலகுவதாக குலாம் நபி ஆசாத் அறிவித்தார். அப்போது ராகுல் காந்திக்கு மிக நீண்ட காட்டமான கடிதம் ஒன்றை குலாம் நபி ஆசாத் அனுப்பி இருந்தார். அக்கடிதத்தில், 2013-ம் ஆண்டு காங்கிரஸில் ராகுல் நுழைந்தது முதல் அதுவரையிலான காங்கிரஸ் கட்சியின் அத்தனை கட்டமைப்புகளும் சீரழிவுக்குள்ளாக்கப்பட்டன. 2013-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டார். அப்போது முதலே அத்தனை அனுபவம் வாய்ந்த தலைவர்களும் ஓரம்கட்டப்பட்டனர். அனுபவே கிஞ்சித்தும் கிடையாதவர்கள்தான் காங்கிரஸ் கட்சியில் தீர்மானிக்கும் சக்திகளாகினர். ராகுல் காந்தி, அவரது பாதுகாவலர்கள், பி.ஏ.க்கள்தான் அத்தனை முக்கிய முடிவுகளையும் எடுக்கின்றனர். 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது கட்சியை சீரமைக்க முன்வைக்கப்பட்டபரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டன. இந்த பரிந்துரைகள் 9 ஆண்டுகளாக இன்னமும் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் உறங்கிக் கொண்டுதான் இருக்கிறது என்றெல்லாம் குமுறி இருந்தார்.
இதன் பின்னர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஒட்டுமொத்த காங்கிரஸ் தலைவர்களை அழைத்துக் கொண்டு தனிக்கட்சி தொடங்கினார் குலாம் நபி ஆசாத். இதனால் ஜம்மு காஷ்மீரில் பாஜகவின் பி டீம் என்ற முத்திரை குலாம் நபி ஆசாத்துக்கு கிடைத்தது. ஆனால் கடந்த் ஒரு மாத காலமாக பாஜகவுக்கு எதிராக காங்கிரஸைப் பாராட்டி பல கருத்துகளை குலாம் நபி ஆசாத் பேசி வருகிறார். இதனைத் தொடர்ந்தே குலாம் நபி ஆசாத்தை மீண்டும் காங்கிரஸுக்குள் கொண்டு வரும் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் ராகுல் காந்தியின் யாத்திரை செல்ல இருக்கிறது. அப்போது எந்த ராகுல் காந்தியை விமர்சித்தாரோ அதே ராகுல் காந்தியின் முன்னிலையில் காங்கிரஸில் மீண்டும் குலாம் நபி ஆசாத் இணையக் கூடும் என கூறப்படுகிறது.
-
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications