டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா தடுப்பூசி - அவசர பயன்பாட்டிற்கு அனுமதி கோரி... பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பம்..!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா தடுப்பூசியை அவசர பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதி கோரி பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் சீரம் இன்ஸ்டியூட் விண்ணப்பித்துள்ளன.

கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டறிவதில் இந்தியா, இங்கிலாந்து, சீனா, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் 6 தடுப்பூசிகள் தொடக்க நிலை பரிசோதனையில் உள்ளன.

Serum Institute of India and Bharat Biotech have applied to Emergency Use Approval

இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் மத்திய அரசு மிகுந்த ஆர்வமும், எச்சரிக்கையும் காட்டி வருகிறது. இதனிடையே பாரத் பயோடெக் நிறுவனம் அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி கோரியுள்ளது தொடர்பாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண்,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு.. 1,236 பேருக்கு தொற்று.. 1,330 பேர் டிஸ்சார்ஜ்.. 13 பேர் உயிரிழப்பு..!தமிழகத்தில் கொரோனா பாதிப்பு.. 1,236 பேருக்கு தொற்று.. 1,330 பேர் டிஸ்சார்ஜ்.. 13 பேர் உயிரிழப்பு..!

இந்தியாவில் 4 லட்சத்திற்கும் கீழ் தான் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை உள்ளதாகவும், மொத்த மக்கள் தொகையில் இது வெறும் 4% மட்டுமே எனவும் அவர் கூறியிருக்கிறார்.செப்டம்பர் மாத இறுதியில் இருந்து கொரோனா பாதிப்பு இந்தியாவில் குறைந்து வருகிறது என்ற தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.

குறுகிய காலத்தில் கொரோனா தடுப்பு மருந்துகளை அதிகளவில் உற்பத்தி செய்யவும் உற்பத்தி செய்யப்பட்ட மருந்துகள் அனைவருக்கும் கிடைக்கச் செய்யவும் மத்திய அரசிடம் திட்டம் உள்ளதாக ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார். மேலும், பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் சீரம் இன்ஸ்டியூட் நிறுவன ஆராய்சியாளர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

English summary
Serum Institute of India and Bharat Biotech have applied to Emergency Use Approval
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X