அமெரிக்க ஏர்போர்ட்டில் கைதான ஷாருக்? உடனே தலையிட்ட காங்கிரஸ் முக்கிய புள்ளி! என்ன நடந்தது தெரியுமா?
டெல்லி: இந்தி சினிமாவில் முக்கிய ஹீரோவாக வலம் வரும் ஷாருக் கான் அமெரிக்காவில் ஏர்போர்ட் ஒன்றில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டார்.. சுமார் 2 மணி நேரம் அவரை விமான நிலைய அதிகாரிகள் விடுவிக்கவில்லையாம். அதன் பிறகு என்ன நடந்தது என்பது குறித்த தகவல்களைக் காங்கிரஸ் எம்பி ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். இது குறித்து நாம் பார்க்கலாம்!
பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக் கானுக்கு உலகெங்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவரும் கூட தனது முஸ்லிம் அடையாளம் காரணமாகப் பலமுறை நேரடி மற்றும் மறைமுகத் தாக்குதல்களை எதிர்கொண்டிருக்கிறார். குறிப்பாக அமெரிக்க ஏர்போர்ட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட பல முறை அவர் பெயருக்காகவே தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறார்.

ஷாருக் கான்
இதற்கிடையே காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் துணைத் தலைவருமான ராஜீவ் சுக்லா சில கருத்து தெரிவித்தார். அமெரிக்காவில் நியூவார்க் விமான நிலையத்தில் பாலிவுட்டின் பாட்ஷா ஷாருக் கான் தடுத்து நிறுத்தப்பட்டபோது, தான் எப்படி உதவியாக இருந்தேன் என்பதையும் அவர் விவரித்தார்.
அமெரிக்காவில் இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பிறகு முஸ்லீம்கள் மீதான வெறுப்பு உணர்வு அதிகரித்து இருந்தது. குறிப்பாக விமான நிலையங்களில் முஸ்லீம் பெயர் இருந்தாலேயே அவர்களைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் போக்கு அதிகரித்து இருந்தது. அதிலும் இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் இருந்து வரும் முஸ்லீம்கள் மணி கணக்கில் தடுத்து நிறுத்தப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகவே இருந்தது. அதில் ஷாருக் கானும் தப்பவில்லை.
அமெரிக்க ஏர்போர்ட்
அப்படியொரு சம்பவத்தின்போது தான் ஷாருக் கான் தடுத்து நிறுத்தப்பட்டார். அப்படி அமெரிக்க ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டபோது ஷாருக் கான் தன்னையே தொடர்புகொண்டதாக சுக்லா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அப்போது ரேண்டமாக பெயர்களை மட்டுமே பார்த்து பயணிகளை நிறுத்தி சோதனை செய்யும் நடைமுறை இருந்தது. யாராக இருந்தாலும் நிறுத்தி வைப்பார்கள். இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, இதுபோன்ற சம்பவங்கள் நடந்தன. விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகளை யாரும் கேள்வி கேட்க முடியாது என்பதால் ஷாருக் என்னைத் தொடர்புகொண்டார்.

வெறும் 15 நிமிடம்
ஷாருக் கான் பெயருக்காகவே துன்புறுத்தப்பட்டார். அப்போது தான் எனக்கு ஷாருக்கிடம் இருந்து அழைப்பு வந்தது. என்னை ஏர்போர்ட்டில் இருந்து விடவில்லை.. இரண்டு மணி நேரமாக என்னை உட்கார வைத்திருக்கிறார்கள் என்று ஷாருக் சொன்னார். நான் யாரைத் தொடர்பு கொண்டேன்.. என்ன நடந்தது என்பதைச் சொல்ல முடியாது. ஆனால், அடுத்த 15 நிமிடங்களுக்குள் ஷாருக்கிடமிருந்து மீண்டும் ஒரு அழைப்பு வந்தது. என்னை விட்டுவிட்டனர்.. எனது லக்கேஜும் என்னிடம் வந்துவிட்டது என ஷாருக் சொன்னார்" என்று சுக்லா தெரிவித்தார்.
ஷாருக் சொன்னது என்ன
2009ஆம் ஆண்டில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. முன்பு இது குறித்து ஷாருக் கானே கூட நேர்காணல் ஒன்றில் சில தகவல்களைப் பகிர்ந்திருந்தார். அது சங்கடமான நிலைமை எனக் குறிப்பிட்டார். அவர் மேலும், "எந்தக் காரணமும் இல்லாமல், எங்கோ வந்து, ஒரு விமான நிலையத்தில் 2-3 மணி நேரம் சிக்கிக்கொள்வது மிகவும் சங்கடமாக இருந்தது.. ஆனால், அதற்காக நாம் வெறுப்பு கொள்ள முடியாது. நாம் அதனுடன் வாழ வேண்டும். இதுபோன்ற சில விஷயங்களைத் தவிர்க்க முடியாது எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications