பாலியல் சேட்டை.. விரட்டிய சிபிசிஐடி.. டேராடூனிலிருந்து தப்பியோடி, டெல்லியில் சிக்கிய சிவ சங்கர் பாபா
டெல்லி: பாலியல் வழக்கில் தேடப்பட்டு வரும் சாமியார் சிவசங்கர் பாபா டேராடூன் மருத்துவமனையில் இருந்து திடீரென தப்பி ஓடிய நிலையில், டெல்லியில் மடக்கிப் பிடித்து கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
சென்னை கேளம்பாக்கம் பகுதியில் சுமார் 64 ஏக்கரில் அமைந்துள்ளது சுஷில் ஹரி பள்ளி. இந்த பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. தன்னை சாமியார் என்று அழைத்துக் கொண்ட இவரை நம்பி ஏராளமான சிஷ்யர்கள் உள்ளனர்.
இந்த நிலையில்தான் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியானது. சிவ சங்கர் பாபா அந்த பள்ளி மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தகவல்தான் அது.

பாலியல் புகார்
சிவ சங்கர் பாபா மீது பள்ளி மாணவிகள் பாலியல் புகார்களை கொடுத்ததன் அடிப்படியில் மாமல்லபுரம் போலீசார் போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதேநேரம், சிவ சங்கர் உத்தரகாண்ட் மாநிலம் தப்பியோடிவிட்டதாக தகவல் கிடைத்தது. வெளி மாநிலங்களுக்கு போலீசார் செல்ல தேவையுள்ளதால் வழக்கு சிபி சிஐடிக்கு மாற்றப்பட்டது.

மருத்துவமனை
டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிவ சங்கர் பாபா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். நெஞ்சு வலி இருப்பதாக கூறி இப்படி போய் அவர் அட்மிட் ஆகிவிட்டார். எனவே, அவரை பிடித்து விசாரிப்பதற்காக சிபிசிஐடி தனிப்படை போலீசார் நேரடியாக டேராடூன் சென்று விட்டார்கள். ஆனால் இதை தெரிந்து கொண்டு அவர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

லுக் அவுட் நோட்டீஸ்
அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக ஏற்கனவே லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது .ஆனால், உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து நேபாளம் தப்பி செல்வதற்கு எளிதான வழி இருக்கிறது. எனவே அவர் நேபாளம் தப்பி செல்லாமல் இருப்பதற்காகவும், பிற மாநில எல்லையில் இருக்கக்கூடிய ஆசிரமங்களிலும் சிபிசிஐடி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

தப்பியோட்டம்
அந்தந்த மாநில போலீசாரின் உதவியோடு இந்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமாக உத்தரகாண்ட் மாநிலத்திலும் டெல்லியிலும் ஆசிரமங்கள் பல இருக்கின்றன. அங்கு எங்காவது அவர் பதுங்கி இருக்கிறாரா என்பதை அறிந்துகொள்வதற்காக அந்த ஆசிரமங்களுக்கு சிபிசிஐடி போலீசார் விரைந்தனர். சைபர் கிரைம் காவல்துறை உதவியுடன் அவர் எங்கே இருக்கிறார் என்பதை கண்டறிவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இப்படி பல வகைகளில் செக் வைக்கப்பட்ட நிலையில், டெல்லியில் சிவ சங்கர் பாபா சிக்கியுள்ளார். அங்கு அவரை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்துள்ளனர். இன்று மாலையே அல்லது நாளை காலை, அவர் சென்னை அழைத்து வரப்படுவார். இங்கு வைத்து விசாரணை நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications