லடாக் பகுதிக்கு மாநில அந்தஸ்து.. 6வது நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டம்! மத்திய அரசு மௌனம் கலையுமா?
ஸ்ரீநகர்: கடந்த 2019ம் ஆண்டு பாஜக தலைமையிலான மத்திய அரசு ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்தது. அதில் லடாக் யூனியன் பிரதேசமாக தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து லடாக்குக்கு மாநில அந்தஸ்து கோரி போராட்டங்கள் வெடித்துள்ளன. பிரபல காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக், மாநில அந்தஸ்து கோரி 6வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகிறார்.
மாநில அந்தஸ்துடன், 6வது அட்டவணை அந்தஸ்தும் வழங்க வேண்டும் என்பதும் இவரது கோரிக்கையாக இருக்கிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 6வது அட்டவணை, சில மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கியுள்ளது. குறிப்பாக அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் சுயாட்சியை இந்த அட்டவணை வழங்குகிறது.

அதேபோல லடாக்குக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என சோனம் வாங்சுக் வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் லடாக்கின் தனித்துவமான பழங்குடி கலாச்சாரம், சுற்றுச்சூழல், நிலம் மற்றும் வேலைவாய்ப்பு மீது உள்ளூர் மக்களின் பங்களிப்பை உறுதி செய்யு முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இது குறித்து மேலும் பேசிய அவர், இது இந்தியாவிலிருந்து பிரிந்து செல்லும் கோரிக்கை அல்ல. இந்திய ஒன்றியத்திற்குள் அதிக சுயாட்சியையும், பாதுகாப்பையும் கோரும் ஒரு முயற்சி என்று விளக்கமளித்துள்ளார்.
கடந்த 2019 மக்களவைத் தேர்தல் அறிக்கையிலும், 2020ம் ஆண்டும் லடாக் பகுதிக்கு இந்தச் சலுகைகளை வழங்குவதாக பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. தற்போது இந்த வாக்குறுதியை நிறைவேற்ற மறுப்பதால், லடாக் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். எனவேதான் உண்ணாவிரத போராட்டத்தை கையில் எடுத்திருக்கிறார்கள்.
ஒருவேளை 6வது அட்டவணையில் லடாக்கை இணைக்கவில்லை எனில், பெரிய அளவிலான தொழில்துறை மற்றும் சூரிய மின்சக்தி திட்டங்கள் லடாக்கில் திணிக்கப்படும் என்ற அச்சம் நிலவுகிறது. இது லடாக்கின் நுட்பமான சூழல் அமைப்பைச் சேதப்படுத்துவதுடன், உள்ளூர் மக்களின் உரிமைகளையும், வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் என்று சோனம் வாங்சுக் கூறுகிறார். முதன்முறையாக, பௌத்தர்கள் பெரும்பான்மையாக உள்ள மற்றும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள கார்கில் மாவட்டங்கள் இந்தக் கோரிக்கை காரணமாக ஒன்று திரண்டுள்ளன.
ஆனால் மத்திய அரசு இந்தக் கோரிக்கைகளுக்கு உறுதியாக மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, லடாக் பிரதிநிதிகள் குழுவிடம், "பிரதமர் கேட்டாலும் நான் உங்கள் கோரிக்கைகளை ஏற்க மாட்டேன்" என்று கூறியதாகப் பல ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது குறித்த பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனாலும், வாய்ப்பில்லை என்று அரசு கைவிரித்திருக்கிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications