Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சோனியாவிடம் அமலாக்கத்துறை விசாரணை- டெல்லியை போர்க்களமாக்கிய காங்கிரஸ்- தொடர் போராட்டம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை முன்பாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று ஆஜராகி உள்ளார். சோனியா காந்திக்கு ஆதரவாக டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் மீண்டும் போராட்டம் நடத்தி வருவதால் பதற்றம் நிலவுகிறது

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்குகளை யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றியதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றது என்பது அமலாக்கப் பிரிவு வழக்கு. இவ்வழக்கில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி இருந்தனர்.

அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல் காந்தி ஆஜரான போது காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு ஆதரவாகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் போராட்டங்களை நடத்தினர். காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களால் டெல்லி போர்க்களமானது. காங்கிரஸ் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். நாடு முழுவதும் காங்கிரஸார் போராட்டமும் நடத்தி இருந்தனர்.

சோனியாவிடம் விசாரணை

சோனியாவிடம் விசாரணை

இந்நிலையில் இன்று சோனியா காந்தி, அமலாக்கத்துறை முன்பாக ஆஜராகி உள்ளார். இதனைத் தொடர்ந்து இன்றும் டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் டெல்லியில் காங்கிரஸ் அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் போலீசார் தடுப்புகளை அமைத்துள்ளனர். மேலும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்துவதால் அதைத் தடுக்கவும் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் போலீஸ் குவிப்பு

டெல்லியில் போலீஸ் குவிப்பு

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்குள் ஊடகங்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் மாநிலங்களிலும் சோனியாவுக்கு ஆதரவாக காங்கிரசார் இன்று சத்தியாகிரகப் போராட்டங்களை நடத்த உள்ளனர். டெல்லியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் பொராட்டத்தில் பங்கேற்றார். இதனால் டெல்லியில் பதற்றம் நிலவுகிறது.

நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்

நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்

இதனிடையே டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில், சோனியாவிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். காங்கிரஸின் கூட்டணி கட்சி எம்.பிக்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். மத்திய அரசின் பழிவாங்கும் போக்குக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பபட்டன.

எதிர்க்கட்சிகள் கண்டனம்

எதிர்க்கட்சிகள் கண்டனம்

மேலும் சோனியாவிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து 14 எதிர்க்கட்சிகள் கூட்டாக கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கவே மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது என கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட 14 கட்சித் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+