மிளிரும் தெற்கு.. சரியும் வடக்கு.. நம்ம நாட்டுக்கு என்னதான் ஆச்சு.. ஜிடிபி சொல்வது என்ன?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டின் ஜிடிபியில் மாநில வாரியான பங்களிப்பு வெளியாகியுள்ளது. இதில் தென் மாநிலங்களின் பங்களிப்பு அதிகரிக்க, வட மாநிலங்களின் பங்கு சரிவை சந்தித்துள்ளது. மகாராஷ்டிரா முதல் இடத்தில் இருந்தாலும், அதன் பங்களிப்பு சதவீதம் குறைந்துள்ளது. அதேபோல மேற்கு வங்கத்தின் நிலையும் பரிதாபமாக உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று சொல்வார்கள். இந்த பழமொழி அந்த காலத்துக்கு பொருந்தலாம். ஆனால் நம் நாட்டின் சமீபத்திய ஜிடிபி நிலவரம் தெரிந்தால், இந்த பழமொழியை யாருமே ஏற்க மாட்டார்கள். "மத்திய அரசு வட மாநிலங்களுக்கு அள்ளிக் கொடுத்துவிட்டு, தென் மாநிலங்களுக்கு கிள்ளிக் கூட கொடுப்பதில்லை." என்ற புகார் எதிர்க்கட்சிகளிடம் பரவலாக உள்ளது. ஆனால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் ஜிடிபியில் தென் மாநிலங்கள் பங்கு அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், வட மாநிலங்களின் பங்கு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

gdp india

ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை, நாட்டின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறித்த அறிக்கையை, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு வெளியிட்டு வருகிறது. அதன்படி ஜிடிபி பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களின் ஜிடிபி வளர்ச்சி சுமார் 30% வரை அதிகரித்துள்ளது.

அதேநேரத்தில் மற்ற மாநிலங்களின் வளர்ச்சி சீராக இல்லை. இதில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பது மேற்கு வங்க மாநிலத்தின் நிலவரம். ஒருகாலத்தில் இந்தியாவின் ஜிடிபி பங்களிப்பில் மேற்கு வங்கம் முக்கிய இடத்தில் இருந்தது. 1960-61 காலகட்டம் தொடங்கி நாட்டின் மொத்த உற்பத்தியில் 10.5% என்ற ஜிடிபியுடன் சிறப்பான வளர்ச்சியில் இருந்தது. தற்போது வெளியாகியுள்ள பட்டியலில் மேற்கு வங்கத்தின் ஜிடிபி 5.6% என்ற கடுமையான சரிவை சந்தித்துள்ளது.

அந்த மாநிலத்தின் தனி நபர் வருமானமும் சரிவை சந்தித்துள்ளது. முன்பு 127.5% இருந்த தனி நபர் வருமானம், தற்போது 83.7% ஆக குறைந்துள்ளது. இது எப்போதும் பின்தங்கிய நிலையில் இருக்கும் ராஜஸ்தான், ஒடிசா மாநிலங்களை விட குறைவு. கடந்த சில தசாப்தங்களாகவே மேற்கு வங்கம் பொருளாதாரத்தில் தொடர் சரிவை சந்தித்து வருகிறது. பொதுவாக கடல்சார் மாநிலங்கள் சிறப்பாக செயல்படும் என்ற பெயர் உள்ளது. அதற்கு விதிவிலக்காக மேற்கு வங்கம் உள்ளது. இது அந்த மாநிலத்தில் செயல்படுத்தப்பட்ட வளர்ச்சி திட்டங்களையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

பீஹார் மாநிலம் சமீபகாலமாக பொருளதாரத்தில் சற்று சீரடைந்திருந்தாலும், வளர்ச்சி அடிப்படையில், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது பீஹார் மிகவும் பின்தங்கியுள்ளது. அதேநேரத்தில் ஒடிசா மாநிலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது. இந்த அறிக்கையில் இப்போதும் இந்தியாவின் ஜிடிபியில் மகாராஷ்டிரா மாநிலம் தான் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் அவர்களின் பங்களிப்பிலும் சரிவு உள்ளது. முன்பு 15% ஆக இருந்த ஜிடிபி, இப்போது 13,3% ஆக குறைந்துள்ளது.

அதேநேரத்தில் மகாராஷ்டிராவின் தனிநபர் வருமானம் 150.7% ஆக உயர்ந்துள்ளது. வட இந்தியாவில் குஜராத், டெல்லி மற்றும் ஹரியானா சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றன. இருப்பினும் பஞ்சாப் மாநிலத்தின் ஜிடிபி மற்றும் தனி நபர் வருமானம் சரிவை சந்தித்துள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ஜிடிபியும் குறைந்து வருகிறது. 1960-61 காலகட்டத்தில் 14 % ஆக இருந்த அந்த மாநிலத்தின் ஜிடிபி, தற்போது 8.4% ஆக உள்ளது. மொத்தமாக தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்கள் சிறப்பாக செயல்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+