பெங்களூர் மட்டுமின்றி.. ஒட்டுமொத்த தென்னிந்தியாவிலும் காலியாகும் தண்ணீர்.. கோடையை சமாளிக்க முடியுமா?
டெல்லி: தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் இந்தியாவில் உள்ள நீர்நிலைகளில் நீர் இருப்பு கணிசமாகக் குறைந்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
இப்போது கோடை வெப்பம் நம்மைப் பாடாய் படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். இந்த வெப்பம் ஒரு பக்கம் என்றால் பல இடங்களில் தண்ணீர் பஞ்சமும் ஏற்படுகிறது. நமது அண்டை மாநிலமான கர்நாடகாவை ஒரு உதாரணமாகச் சொல்லலாம்.

அதேநேரம் கர்நாடகா மட்டுமின்றி, ஒட்டுமொத்த தென்னிந்தியாவிலும் நிலைமை மோசமாகவே இருக்கிறதாம். பருவமழை தொடங்க இன்னும் பல மாதங்கள் இருக்கும் நிலையில், பெங்களூரில் ஏற்பட்டுள்ள நிலை மற்ற பகுதிகளிலும் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.
நீர் எவ்வளவு: மத்திய நீர் ஆணையம் நாடு முழுக்க இருக்கும் நீர்நிலைகளில் எந்தளவுக்கு நீர் இருக்கிறது என்பது குறித்த தகவல்களைத் தொடர்ச்சியாக வெளியிடும். அதன்படி சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ள தகவல்கள் தான் கவலை அளிப்பதாக இருக்கிறது.
தென் இந்தியாவில் மொத்தம் 42 நீர் நிலையங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவை அனைத்தைச் சேர்த்துப் பார்க்கும் போது அதன் மொத்த கொள்ளளவு 53.334 BCM (பில்லியன் கன மீட்டர்) ஆகும். ஆனால், இந்த நீர்நிலைகளில் இப்போது வெறும் 8.865 BCM நீர் மட்டுமே இருக்கிறது. அதாவது அவற்றின் மொத்த கொள்ளளவில் 17 சதவீதம் மட்டுமே நீர் இருப்பதையே இது காட்டுகிறது.
ரொம்ப குறைவு: கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த நீர்நிலைகளில் மொத்த கொள்ளவில் 29 சதவீதம் நீர் இருந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாகப் பார்த்தால் கூட 23 சதவீத நீர் இருந்துள்ளது. ஆனால் இவை அனைத்தையும் விடக் குறைவாகவே இந்தாண்டு நீர் இருப்பதை இந்த டேட்டா காட்டுகிறது..
தென்னிந்தியாவில் இந்தளவுக்கு நீர் கொள்ளளவு குறைவது என்பது இந்த மாநிலங்களில் நீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தலாம்.. நீர்ப்பாசனம், குடிநீர் விநியோகம் என பல விதங்களில் இது சவாலை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.
கிழக்கு இந்தியா: அதேநேரம் அசாம், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களை உள்ளடக்கிய நாட்டின் கிழக்குப் பகுதியில், கடந்த ஆண்டு மற்றும் பத்தாண்டு சராசரியுடன் ஒப்பிடுகையில் நீர் சேமிப்பு அதிகமாகவே இருக்கிறது..
அந்தப் பகுதியில் மொத்தம் 23 நீர் நிலையங்கள் கண்காணிக்கப்படும் நிலையில், அதன் மொத்த நீர் கொள்ளளவு 20.430 பிசிஎம் ஆகும். அதில் 39%, அதாவது 7.889 பிசிஎம் அளவுக்கு இப்போது நீர் இருக்கிறது.. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் (34 சதவீதம்) மற்றும் பத்தாண்டு சராசரியாக (34 சதவீதம்) இருந்த சேமிப்பை விட இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதர பகுதிகள்: அதேநேரம் கிழக்கு இந்தியாவைத் தவிர மற்ற பகுதிகளில் நிலைமை கொஞ்சம் மோசமாகவே இருக்கிறது. குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களை உள்ளடக்கிய மேற்கு இந்தியாவில் மொத்தம் இருக்கும் 49 நீர்நிலைகளில் மொத்த கொள்ளளவில் 31%, அதாவது 11.77 பிசிஎம் மட்டுமே நீர் இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் (38 சதவீதம்) மற்றும் பத்தாண்டு சராசரியாக (32.1 சதவீதம்) இருந்த சேமிப்பைக் காட்டிலும் குறைவாகும். வடக்கு மற்றும் மத்திய இந்திய பகுதிகளாலும் நீர் நிலை சராசரிகளுடன் ஒப்பிடும்போது குறைவாகவே இருக்கிறது..
அதாவது பிரம்மபுத்திரா, நர்மதா மற்றும் தபி போன்ற ஆற்றுப் படுகைகள் இயல்பை விட நீர் சேமிப்பு அதிகமாக இருக்கிறது. அதேநேரம் காவிரி மற்றும் மகாநதி மற்றும் பெண்ணாறு இடையே கிழக்குப் பாயும் ஆறுகள் நீர் மிக மிகக் குறைவாக இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.
-
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications