ஹிஜாப் வழக்கு.. 2 நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்பு! இதன் அர்த்தம் என்ன? வழக்கில் அடுத்து என்ன நடக்கும்
டெல்லி: ஹிஜாப் வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இரண்டு தீர்ப்புகளை வழங்கி உள்ளது. இரட்டை நீதிபதி அமர்வில் இரண்டு நீதிபதிகளும் தனி தனி தீர்ப்புகளை வழங்கி உள்ளனர்.
இதனால் வழக்கில் அடுத்து என்ன நடக்கும் என்ற சந்தேகம் எழுபவர்களுக்கு இந்த செய்தி விளக்கம் அளிக்கிறது!
ஹிஜாப் வழக்கு நாட்டையே உலுக்கிய வழக்கு ஆகும். கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து பியூ கல்லூரிகளுக்கு வந்த மாணவியருக்கு எதிராக இந்துத்துவா மாணவர்கள் போராட்டம் செய்தனர். இதையடுத்து வகுப்பிற்கு ஹிஜாப் உள்ளிட்ட மத அடையாளங்களை அணிந்து வர கூடாது என்று மாநில அரசு கட்டுப்பாடு விதித்தது.

இதையடுத்து கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக அங்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. இஸ்லாமிய மாணவர்கள் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டது. இதை எதிர்த்து மாநில அரசும், சில இந்துத்துவா அமைப்புகளும் பதில் மனுக்களை தாக்கல் செய்தன.
இந்த வழக்கில்தான் கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடை தொடரும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் 15ம் தேதி தீர்ப்பு வழங்கியது.
ஹிஜாப் என்பது அடிப்படை மத உரிமைகளில் சேராது. இது இஸ்லாமில் உள்ள அடிப்படை பழக்க வழக்கங்களில் ஒன்று கிடையாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது. இதனால் கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்பின் சரியாக பள்ளி விடுமுறை வந்ததால் இந்த பிரச்சனை அடங்கியது. அதே சமயம் இதற்கு எதிராக இஸ்லாமிய மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

மொத்தம் 23 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டன. இதில் சில மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக தாக்கல் செய்யப்பட்ட ரிட் பெட்டிஷன் மனுக்கள் ஆகும். இந்த வழக்கில் தினசரி விசாரணைகள் நடைபெற்று வந்தன.
இந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் நீதிபதி சுதான்ஷு துஹியா ஆகியோர் அமர்வு விசாரணை நடத்தி வந்தனர். இதில் நீதிபதி ஹேமந்த் குப்தா விசாரணையின் போதே ஹிஜாபின் அவசியம் குறித்து கேள்விகளை எழுப்பி வந்தார்.
ஹிஜாப் என்பது அடிப்படை உரிமை. இதில் தலையிட கூடாது. அடிப்படை மத உரிமைகளில் அரசு தலையிட முடியாது என்று மாணவிகள் தரப்பு கேள்விகளை எழுப்பியது. இதில் கர்நாடகா அரசு வைத்த வாதத்தில், பர்தா அணிவதை மத ரீதியிலான உரிமை, அடிப்படை உரிமை என்று கொள்ள முடியாது. குரானின் ஹிஜாப் அணிவது பற்றி இருக்கலாம். ஆனால் குரானில் இருக்கும் எல்லா விஷயங்களும் அடிப்படை உரிமை அல்லது மத ரீதியிலான பழக்க வழக்கம் என்று சொல்லி விட முடியாது.
குரானில் இருக்கும் விஷயங்கள் எல்லாம் கட்டாயமாக மத ரீதியான பழக்கம் என்று சொல்லிவிட முடியாது. நீதிபதி குரேஷி இதே அடிப்படையில்தான் மாட்டுக்கறி வழக்கில் தீர்ப்பு வழங்கினார். மாட்டுக்கறி உண்ண சில மாநிலங்களில் தடை உள்ளது. அது மத ரீதியான கட்டாய பழக்கம் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவில்லையே அப்படித்தான் ஹிஜாப் விவகாரமும், என்று வாதம்வைத்தனர்.
வழக்கில் 10 நாள் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வாழங்கப்பட்டது. ஹிஜாப் வழக்கில் உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உள்ளது.
அதாவது இரண்டு நீதிபதிகளும் வேறு வேறு தீர்ப்பு வழங்கி உள்ளனர்.
நீதிபதி 1 - மேல்முறையீட்டு மனுவை நீதிபதி ஹேமந்த் குப்தா தள்ளுபடி செய்துள்ளார்.கர்நாடக ஹைகோர்ட் ஹிஜாப்பிற்கு விதித்த தடை சரி என ஹேமந்த் குப்தா தீர்ப்பு வழங்கி உள்ளார்.
நீதிபதி 2 - கர்நாடக ஹைகோர்ட் தீர்ப்பை தள்ளுபடி செய்தார் நீதிபதி சுஷாந்து துலியா. அதாவது ஹிஜாப் தடை செல்லாது என்று அவர் தீர்ப்பு வழங்கி உள்ளார்.

அடுத்து என்ன நடக்கும்?
இதனால் வழக்கில் அடுத்து என்ன நடக்கும் என்ற சந்தேகம் என்ற சந்தேகம் எழலாம்!
இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதி அல்லது 5 நீதிபதி அமர்வுக்கு வழக்கு மாற்றம் செய்யப்படும். சமயத்தில் அரசியல் சாசன அமர்விற்கு கூட வழக்கு மாற்றப்படும்.
இதை பற்றி புதிய தலைமை நீதிபதி (பெரும்பாலும் சந்திரசூட்) பதவி ஏற்ற பின்பே முடிவு எடுக்க வாய்ப்புகள் உள்ளன.
-
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications