Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: அனுர குமார திசநாயக்க சுனாமியில் புதைந்து போன மகிந்த ராஜபக்சே கட்சி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவின் ஜேவிபியை உள்ளடக்கிய 21 கட்சிகளின் கூட்டணியான தேசிய மக்கள் சக்தி 88 இடங்களுடன் முன்னிலை வகிக்கிறது. பெரும்பான்மைக்கு தேவை 113 இடங்கள். அனுர குமார திசநாயக்க மீதான நம்பிக்கையை வைத்து எழுந்த ஆதரவு சுனாமியில் பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, இலங்கை தமிழரசுக் கட்சி ஆகியவை காணாமல் போய் சொற்ப இடங்களுடன் தத்தளிக்கின்றன.

இலங்கையின் அரசியலில் ஐக்கிய தேசியக் கட்சி, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியவைதான் கடந்த பல ஆண்டுகளாக முதன்மை கட்சிகளாக இருந்து வந்தன. தமிழர் தரப்பில் இலங்கை தமிழரசுக் கட்சி பிரதான கட்சியாக இருந்து வந்தது.

srilanka parliament election 2024 srilanka sri lanka parliament election results


கடந்த சில ஆண்டுகளில் ஐக்கிய தேசியக் கட்சி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவை பிளவுபட்டு புதிய கட்சிகளாகின. இதேபோல இலங்கை தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சிதறிப் போயின.

2020-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்: 2020-ம் ஆண்டு இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ராஜபக்சேக்களின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி 145 இடங்களில் வென்றது; ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி தனிக் கட்சியை உருவாக்கிய சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி 54 இடங்களில் வென்றது. இலங்கை தமிழரசுக் கட்சி 10 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. ஜேவிபியை உள்ளடக்கிய தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு 3 இடங்களும் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரே ஒரு இடமும்தான் கிடைத்திருந்தது.

ஜனாதிபதி தேர்தல்: ஆனால் அண்மையில் நடைபெற்ற இலங்கை ஜனாதிபதி தேர்தலில் எல்லாமே தலைகீழாகிப் போயின. நாடாளுமன்றத்தில் வெறும் 3 எம்பிக்களை மட்டுமே பெற்றிருந்த தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுர குமார திசநாயக்க வெற்றி பெற்று புதிய அத்தியாயத்தை எழுதினார். இதனையடுத்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது.

போட்டியிடாத பெருந்தலைகள்: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் இந்த முறை இலங்கையின் அரசியல் முகங்களான ரணில் விக்கிரமசிங்கே, மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் பலரும் போட்டியிடவில்லை. ராஜபக்சே குடும்பத்தின் கோட்டையான அம்பந்தோட்டையில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கூட களம் காணவில்லை. அக்குடும்பத்தின் ஷசீந்திரா ராஜபக்சே மட்டும் வேறு ஒரு மாவட்டத்தில் போட்டியிட்டார். இலங்கை தமிழரசுக் கட்சியும் இலங்கை தமிழர் கட்சிகளும் வெவ்வேறு அணிகளாக சிதறி நின்று தேர்தலை எதிர்கொண்டன.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்: நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளும் புதிய சரித்திரத்தை எழுதிக் கொண்டிருக்கின்றன. 2020-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 3 இடங்களைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி தற்போது 88 இடங்களுடன் முன்னிலை வகிக்கிறது. கடந்த தேர்தலில் 54 இடங்களைப் பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி 24 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

அழிந்து போன ராஜபக்சே கட்சி: கடந்த தேர்தலில் 145 இடங்களைப் பெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போதைய தேர்தலில் வெறும் 2 இடங்களைத்தான் பெற்றிருக்கிறது. கடந்த தேர்தலில் 10 எம்பிக்களைப் பெற்றிருந்த இலங்கை தமிழரசுக் கட்சிக்கு தற்போது வரை 2 இடங்கள்தான் கிடைத்திருக்கிறது. அதேபோல ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இந்த முறையும் இதுவரை ஒரு இடம்தான் கிடைத்திருக்கிறது. இந்த தேர்தலுடன் ராஜபக்சேக்களின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சியே அழிந்து போய்விட்டது.

சிதறிப் போன தமிழர் கட்சிகள்: இலங்கை தமிழரசுக் கட்சி பெற்ற தோல்விக்கு காரணமே ஒற்றுமையின்மைதான். வடக்கு கிழக்கு வாழ் தமிழர்கள் ஒருங்கிணைந்து ஒரே தமிழ்த் தலைமையை முன்னிறுத்தாமல் தடியெடுத்தவர்கள் எல்லாம் கட்சி, கூட்டணி என களம் கண்டது ஒட்டுமொத்த தமிழர் வாக்குகளை அப்படியே சிங்களருக்கு தாரைவார்த்துக் கொடுக்க வைத்திருக்கிற துயரத்தை என்னவென்று சொல்வதாம்!

பேரினவாதிகள் பிடியில் இலங்கை: ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி இப்போது நாடாளுமன்றத்திலும் பெரும்பான்மை பலம் பெறுகிறது. தேசிய மக்கள் சக்தியில் இடம் பெற்றுள்ள ஜேவிபிதான் பிரதான கட்சி. இது சிங்களப் பேரினவாதத்தை வலியுறுத்தி தமிழ்த் தேசிய இன உரிமைகளை நிராகரிக்கிற கட்சி. தமிழ்த் தேசிய இனம் என்பதே இல்லை; இலங்கை என்பது ஒற்றை நாடு- ஒற்றையாட்சி என்கிற கோட்பாட்டை வலியுறுத்துகிற ஜேவிபி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பெயரளவிலான இடதுசாரி கட்சி. இதனால் இலங்கையில் தமிழர்களுக்கான அரசியல் உரிமைகள் குறித்து இனி பேசக் கூட முடியுமா? என்பது கேள்வி. ஆகக் குறைந்தபட்சம் இந்தியா கொண்டு வந்த 13-வது அரசியல் திருத்தம் குறித்து வாயாவது திறக்க முடியுமா? என்பதும் ஆகப் பெரும் கேள்விக்குறிதான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+