கோமிய ஆய்வுக்கு பத்மஸ்ரீ? பாய்ந்து வந்த கேரள காங்கிரஸ்.. காமகோடிக்கு ஆதரவாக நின்ற ஸ்ரீதர் வேம்பு!
டெல்லி: சென்னை ஐஐடி இயக்குநர் வி. காமகோடிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்புக்கும் கேரள காங்கிரஸுக்கும் இடையே சமூக வலைத்தளத்தில் கடுமையான மோதல் வெடித்தது. காமகோடியின் தேர்வு குறித்து கேரளக் காங்கிரஸ் கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், ஸ்ரீதர் வேம்பு அதற்குக் கடுமையாகப் பதிலடி கொடுத்தார்.
2026ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் குறித்த அறிவிப்பு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதில் 2022ஆம் ஆண்டு முதல் சென்னை ஐஐடி இயக்குநராகப் பணியாற்றி வரும் வி. காமகோடிக்கு, கல்வி மற்றும் ஆராய்ச்சியில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்தப் பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

காமகோடி
இது தொடர்பாக காமகோடி வெளியிட்ட அறிக்கையில், "பத்மஸ்ரீ விருது என்பது எனக்கு ஒரே ஒரு விஷயத்தை தான் உணர்த்துகிறது. அதாவது விக்ஸித் பாரத் 2047-ஐ நோக்கி எனது சிறந்த முயற்சிகளை மேற்கொள்வேன். இந்த விருது ஒரு தனிநபரால் சாத்தியமில்லை. இது ஒரு கூட்டு முயற்சி" என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்..
கேரளக் காங்கிரஸ்
அவரது இந்த அறிக்கைக்குக் கேரளக் காங்கிரஸ் பிரிவு பதிலளித்திருந்தது. அதில், "வி. காமகோடிக்கு இந்தக் கௌரவம் கிடைத்ததற்கு வாழ்த்துக்கள். சென்னை ஐஐடியில் நீங்கள் செய்த கோமியம் குறித்த அதிநவீன ஆராய்ச்சியை நாடு அங்கீகரிக்கிறது. இது கோமியத்தை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்கிறது" என்று கிண்டலாகப் பதிவிட்டிருந்தது.
பின்னணி
கடந்த ஆண்டு காமகோடி தெரிவித்த சில கருத்துக்களைக் குறிப்பிடும் வகையிலேயே கேரளக் காங்கிரஸின் இந்தப் பதிவு அமைந்திருந்தது. அப்போது அவர், 'கௌமூத்ரா' எனப்படும் கோமியத்திற்கு "பாக்டீரியா எதிர்ப்பு" மற்றும் "பூஞ்சை எதிர்ப்பு" பண்புகள் இருப்பதாகவும், அது எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (IBS) உள்ளிட்ட பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் என்றும் கூறியிருந்தார். அப்போதே அவரது இந்தக் கருத்துகளுக்கு எதிர்ப்பு கிளம்பியது.
ஏனென்றால் கோமியம் இதுபோன்ற பாதிப்புகளைக் குணப்படுத்தும் என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. அப்படியிருக்கும்போது சென்னை ஐஐடியின் தலைவர் என்ற முக்கியமான அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் பொறுப்பில் இருக்கும் ஒருவர் இப்படிப்பட்ட கருத்துக்களைக் கூறுவது சரி தானா என பலரும் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
இருப்பினும், அப்போது பேராசிரியர் காமகோடி தனது நிலைப்பாட்டை விளக்கினார். அப்போது அவர் "கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளன" என்று பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவை எல்லாம் குறிப்பிட்டுக் கிண்டல் செய்யும் வகையிலேயே கேரளக் காங்கிரஸ் பதிவிட்டிருந்தது.
ஸ்ரீதர் வேம்பு
இதற்கிடையே காமகோடிக்கு ஆதரவாக ஸ்ரீதர் வேம்பு இந்த விவகாரத்தில் பதிலளித்தார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "பேராசிரியர் காமகோடி மைக்ரோ-பிராசஸர் வடிவமைப்பு போன்ற ஆழ்ந்த தொழில்நுட்பப் பிரிவுகளில் பணியாற்றுகிறார். அவர் இந்தியாவின் சிறந்த தொழில்நுட்ப நிறுவனமான சென்னை ஐஐடியின் இயக்குநர். அவர் NSAB-யில் பணியாற்றுகிறார். இந்த கௌரவத்திற்கு அவர் முற்றிலும் தகுதியானவர்
நான் அவரை அறிவியல் ரீதியாக ஆதரித்தேன். இப்போதும் கூட நான் அவருக்கு ஆதரவாகவே இருக்கிறேன். சாணம் மற்றும் கோமியம் சிறந்த மைக்ரோபயோம் கொண்டவை. அவை மனிதர்களுக்கு முக்கியமாக இருக்கலாம். இவை ஆராய்ச்சிக்குத் தகுதியானவை இல்லை என்று நினைப்பது ஒரு அடிமைத்தனமான காலனிய மனநிலை. ஒரு நாள் ஹார்வர்டோ அல்லது எம்ஐடி-யோ இது குறித்து ஆய்வு வெளியிடும்போது, இந்த அடிமைப்படுத்தப்பட்ட மனங்கள் அதை வேத சத்தியமாக வழிபடும்" என்றும் கடுமையாக விமர்சித்தார்.
பதிலடி
இதற்குப் பதிலளிக்கும் விதமாகக் கேரளக் காங்கிரஸ், "அன்புள்ள வேம்பு, ஆராய்ச்சி என்பது மேற்கத்திய ஆய்வுக் கட்டுரைகளை மேற்கோள் காட்டுவது அல்ல. இந்த மாட்டுச் சாணம் மற்றும் கோமியம் குறித்த ஆராய்ச்சியின் விளைவு என்ன? நாம் ஏன் மாட்டுச் சாணத்துடன் மட்டும் நின்றுவிட்டோம்? எருமைகள், ஆடுகள் அல்லது மனிதர்களின் கழிவுகள் பற்றி ஏன் ஆய்வு செய்வதில்லை?" என்று கேள்வி எழுப்பியது. இரு தரப்பும் இப்படி மாறி மாறி விமர்சித்தது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது வருகிறது.
-
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Congress: விடாப்பிடியாக வாங்கிய காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் போட்டியிடும் 28 தொகுதிகள் எவை? லிஸ்ட் வெளியானது -
குறைந்த தொகுதிகளை வாங்கிவிட்டு அடிச்சிக்கிறாங்க.. தமிழக காங். நிர்வாகிகளை விமர்சித்த பிரவீன் சக்கரவர்த்தி -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
காங்., விற்று திண்கின்றனர்! இனி யாராலும் காக்க முடியாது.. திமுக தொகுதி பங்கீட்டால் ஜோதிமணி அட்டாக் -
மதுரை வடக்கு.. பிடிவாதம் காட்டிய மாணிக்கம் தாகூர்.. கண்டுகொள்ளாத திமுக! விருதுநகர் தொகுதியும் போச்சா -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
காங்கிரஸ் கை வசம் வந்த ஈரோடு கிழக்கு! ஈவிகேஎஸ் இளங்கோவன் பேத்தி சமன்னா போட்டியா? -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications