குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு 10 மாதத்தில் 7 பரோல்! ஹரியானா அரசு மீது காட்டம்! கோர்ட் அதிரடி ஆர்டர்
சண்டிகர்: பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங்கிற்கு இனி நீதிமன்ற அனுமதி இன்றி பரோல் வழங்க கூடாது என்று ஹரியான சிறைத்துறைக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹரியாணாவை தலைமையிடமாகக் கொண்டது தேரா சச்சா சவுதா அமைப்பு. இந்த அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் தனது ஆசிரமத்தில் 2 பெண் சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார். இதற்கிடையில், கடந்த 2002 ஆம் ஆண்டு தேரா சச்சா சவுதா அமைப்பில் ஆசிரம மேலாளர் ரஞ்சித் சிங் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த வழக்கிலும் குர்மித் ராம் ரஹீமிற்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இவருக்கு ஏராளமான ஆதரவாளர்கள் உள்ளனர். சிறை தண்டனை விதிக்கப்பட்டு ஹ்ரியானா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் குர்மீத் ராம் ரஹிமிக்கு அடிக்கடி பரோல் வழங்கப்படுவது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. அதவது கடந்த ஜனவரி மாதம் 7-வது முறையாக குர்மீத் ரஹிமிற்கு 50 நாட்கள் பரோல் விடுவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 10 மாதங்களில் 7-வது முறையாக குர்மித் ரஹிமிற்கு பரோல் வழங்கப்பட்டது. குறிப்பாக பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் சமயத்திலும் ஹரியானா மாநகராட்சி தேர்தல் சமயத்திலும் குர்மித் ராம் ரஹிமிற்கு பரோல் வழங்கப்பட்டு வந்தது. தற்போது மீண்டும் பரோல் வழங்கப்பட்டுள்ள நிலையில், குர்மித் ராம் ரஹீமிற்கு அடிக்கடி பரோல் வழங்கப்படுவது தொடர்பான வழக்கு பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஹரியானா அரசை கடுமையாக சாடியுள்ளது. மார்ச் 10 ஆம் தேதிக்குள் குர்மித் ராம் ரஹிம் கோர்ட்டில் சரண்டர் ஆக வேண்டும் என்றும் அடுத்த முறை பரோல் வழங்கப்படும் முன் மாநில அரசு நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும் எனவும் கூறியுள்ளது. மேலும் எத்தனை பேருக்கு இதுபோல பரோல்வழங்கப்பட்டுள்ளது என்ற விவரங்களையும் மாநில அரசு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications