தேசிய விளையாட்டு போட்டியில் மிஸ்ஸான தமிழக அணி.. மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் சஸ்பெண்ட்! அதிரடி
டெல்லி: டெல்லியில் நடக்கும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான தேசிய விளையாட்டு போட்டியில் தமிழக அணி பங்கேற்காதது பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ள நிலையில் இன்று பள்ளி கல்வித்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான தேசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விளையாட்டு போட்டியில் டெல்லியில் துவங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் இருந்து பல்வேறு அணிகள் தேசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கும்.

அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் இதில் ஆர்வமாக இருப்பார்கள். மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடக்கும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் இந்த தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்பார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் நீச்சல், கூடைப்பந்து, மல்யுத்தம் உள்ளிட்ட 32 போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்களை அந்தந்த மாநில அரசு தேர்வுசெய்து போட்டிக்கு அனுப்புகின்றன. அதன்படி, இந்த ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 6ம் தேதி டெல்லியில் தொடங்கியது. வரும் 13ம் தேதி வரை போட்டிகள் நடக்கின்றன.
இந்த போட்டியில் தான் தமிழகம் சார்பில் அணிகள் பங்கேற்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் அதிகாரிகளின் அலட்சியம் என்றே கூறப்படுகிறது. அதாவது தேசிய போட்டியில் பங்கேற்க கூடிய மாணவ-மாணவிகளை அதிகாரிகள் தேர்வு செய்யவில்லை என்பது தான் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.
லக்னோவிலிருந்து கடந்த மே மாதம் 11ம் தேதியே 247 மாணவர்களை அனுப்புமாறு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் முதன்மை விளையாட்டு ஆய்வாளருக்கு சுற்றறிக்கை வந்திருக்கிறது. ஆனால் அவர் பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இது தற்போது பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு உயர்கல்வி பயில முன்னுரிமை அளிக்கப்படும். இதனால் தான் எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து தமிழக அரசை விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். இந்நிலையில் தான் பள்ளி கல்வித்துறை விசாரைணயை தொடங்கியது.
இந்த விசாரணையின் அடிப்படையில் தான் தற்போது மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை பள்ளி கல்வித்துறை இயக்குனர் அறிவொளி பிறப்பித்துள்ளார். மேலும் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications