தீவிரவாதி மசூத் ஆசாரின் மொத்த குடும்பமும் காலியாக காரணமான.. பட்டாம்பூச்சி விளைவு.. இதுதான் இந்தியா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானின் பஹவல்பூரில் இந்தியா நடத்திய தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரின் சகோதரி உட்பட 10 குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். கிட்டத்தட்ட அவரின் மொத்த குடும்பமும் இந்த தாக்குதலில் பலியாகி உள்ளது. ஹபீஸ் சயீத்திற்கு பின் பாகிஸ்தானில் மிகப்பெரிய தீவிரவாதியாக கருதப்படும் இவரின் குடும்பம் மொத்தமாக நிர்மூலம் ஆகி உள்ளது. இந்தியா நடத்திய இந்த தாக்குதலுக்கும்.. பட்டாம்பூச்சி விளைவிற்கும் ஒரு தொடர்பு உள்ளது.

பட்டாம்பூச்சி விளைவு அதாவது butterfly effect என்பார்கள்.. இங்கே பட்டாம்பூச்சி அசைக்கும் சிறிய இறக்கை அசைவு உலகில் எங்கோ ஒரு இடத்தில் புயலை கூட உருவாக்கலாம் என்பார்கள். உதாரணமாக ஜப்பானின் ஹிரோஷிமா நாகசாகி ஆகிய இரண்டு நகரங்கள் மீது அமெரிக்கா இரண்டாம் உலகப்போரில் அணு குண்டுகளை போட்டது பலருக்கும் தெரியும்.

pakistan Jammu Kashmir

ஆனால் அதற்கும் முன் லிஸ்டில் இந்த நகரங்கள் இல்லை. இதற்கு பதிலாக கியோட்டோ, கோகுரா, நிகாடா ஆகிய நகரங்கள்தான் இருந்தன. இதில் கோகுரா, நிகாடாவில் ஏற்பட்ட திடீர் வானிலை மாற்றத்தால் நாகசாகி கடைசி நேரத்தில் தேர்வு செய்யப்பட்டது.

அதேபோல் ஜப்பானின் கியோட்டோ முதலில் அணுகுண்டுக்கான இலக்கு பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. அதன் அளவு, ராணுவ முக்கியத்துவம் மற்றும் உளவியல் தாக்கம் (ஜப்பானின் கலாச்சார இதயமாகஇருந்தது ) காரணமாக அங்கே தாக்க முடிவு செய்தனர்.

ஆனால் அப்போது, இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க போர் செயலாளராக இருந்த ஹென்றி எல். ஸ்டிம்சனின் தனிப்பட்ட தலையீடு காரணமாக இந்த இடம் லிஸ்டில் இருந்து நீக்கப்பட்டு ஹிரோஷிமா சேர்க்கப்பட்டது. ஹென்றி எல். ஸ்டிம்சன் அவரின் 18வது வயதில் கியோட்டோவிற்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அங்கே பல நாட்கள் தங்கி இருக்கிறார். அவரை பொறுத்தவரை அதுதான் உலகிலேயே அழகான இடம்.

இதன் காரணமாக அந்த நகரத்தை அவர் அதிகம் விரும்பி இருக்கிறார். அதன்பின் இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க போர் செயலாளராக மாறிய அதே ஹென்றி எல். ஸ்டிம்சன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி கியோட்டோ மீது குண்டு போடாமல் தடுத்தார். தான் விரும்பிய அழகிய நகரத்தை அழிக்க அவர் விரும்பவில்லை.

இதுதான் பட்டாம்பூச்சி விளைவு

1. 18 வயது இளைஞராக இருந்த, பவர் இல்லாத ஹென்றி எல். ஸ்டிம்சன் என்ற நபர் மேற்கொண்ட பயணம் ஒன்று பல ஆண்டுகள் கழித்து கியோட்டோ என்ற நகரத்தை காத்து இருக்கிறது.

2. அதே 18 வயது இளைஞரின் பயணம்.. ஹிரோஷிமா என்ற நகரம் அழிய காரணம் ஆகிவிட்டது. அங்கே மக்கள் சாகவும் காரணம் ஆகிவிட்டது.

3. அமெரிக்க போர் செயலாளராக இருந்த அவர் தடுக்காமல் போய் இருந்தால் ஜப்பான் வேறு மாதிரி அழிந்திருக்கும்.. கியோட்டா இருந்திருக்காது.. ஹிரோஷிமா என்ற பெயரே பலருக்கும் தெரியாமல் போய் இருக்கும்.. உலக அரசியலும் கூட வேறு மாதிரி மாறி இருக்கும்.

4. இதற்கெல்லாம் காரணம் அமெரிக்க போர் செயலாளராக இருந்த ஹென்றி எல். ஸ்டிம்சன் தனது 18 வயதில் மேற்கொண்ட அந்த சின்ன பயணம்தான் காரணம் என்றால் நம்ப முடிகிறதா? அந்த பயணத்தை மேற்கொள்ளும் போது அவருக்கே தெரிந்து இருக்காது நமது பயணம் இவ்வளவு பெரிய உலக அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று.

இந்தியாவின் தாக்குதல்

இது இந்தியாவின் தாக்குதலுக்கும் இப்போது பொருந்தும். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானின் பஹவல்பூரில் இந்தியா நடத்திய தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரின் சகோதரி உட்பட 10 குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். கிட்டத்தட்ட அவரின் மொத்த குடும்பமும் இந்த தாக்குதலில் பலியாகி உள்ளது.இந்தியா நடத்திய இந்த தாக்குதலுக்கும்.. பட்டாம்பூச்சி விளைவிற்கும் ஒரு தொடர்பு உள்ளது.

நேற்று அதிகாலை நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானின் 9 தீவிரவாத தளவாடங்கள் நீக்கப்பட்டன. ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் தலைமையகங்கள் 'ஆபரேஷன் சிந்தூர்' இன் கீழ் குறிவைக்கப்பட்டன. இந்திய ஆயுதப்படைகள், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒன்பது இடங்களைத் தாக்கியது. முக்கியமாக பஹாவல்பூரில் உள்ள மர்காஸ் சுப்ஹான் அல்லா, தெஹ்ரா கலனில் உள்ள சர்ஜால், கோட்லியில் உள்ள மர்காஸ் அப்பாஸ் மற்றும் முசாஃபராபாத்தில் உள்ள சையத்னா பிலால் முகாம் ஆகிய முகாம்கள் தாக்கப்பட்டன. இதில் பஹாவல்பூரில் உள்ள மர்காஸ் சுப்ஹான் அல்லா மிக முக்கியமான இடங்கள் ஆகும்.

துல்லியமான ராணுவத் தாக்குதல்களில் தாக்கப்பட்ட இலக்குகளில் மேற்கண்ட இடங்கள் அடங்கும். இந்த முகாம்கள் அனைத்தும் தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதக் குழுவின் கீழ் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி 14, 2019 அன்று புல்வாமா தாக்குதல் உட்பட பயங்கரவாதத் திட்டமிடலில் ஈடுபட்டுள்ள ஜெ.எம் இன் செயல்பாட்டுத் தலைமையகம் மர்காஸ் சுப்ஹான் அல்லா ஆகும். புல்வாமா தாக்குதல் நடத்தியவர்கள் இந்த முகாமில் பயிற்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.

பட்டாம்பூச்சி விளைவு

17 வருடங்களுக்கு முன் மும்பை தீவிரவாத தாக்குதலில் கைது செய்யப்பட்டு பின்னர் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப் இங்குதான் பயிற்சி பெற்றார். அப்போது நடத்திய விசாரணையில், ஜெ.எம் இன் செயல்பாட்டுத் தலைமையகம் மர்காஸ் சுப்ஹான் அல்லாவில் தான் பயிற்சி பெற்றதாகவும் பஹாவல்பூரில் உள்ள மர்காஸ் சுப்ஹான் அல்லாவில் பலர் பயிற்சி பெற்று வருவதாகவும் இந்தியாவின் விசாரணையில் வாக்குமூலம் கொடுத்தார். அவர் அப்போது தந்த டிப் இப்போது அந்த இடத்தை குறி வைக்க முக்கிய காரணமாக மாறி உள்ளது.

அவர் கொடுத்த சின்ன டிப்ஸ்.. ஒரு விசாரணையில் அவர் உளறிய அந்த சிறிய வார்த்தைதான் இப்போது ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரின் சகோதரி உட்பட 10 குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட காரணமாக மாறிவிட்டது.. என்றால் நம்ப முடிகிறதா?

மர்காஸ் சுப்ஹான் அல்லா முகாமில்தான் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மௌலானா மசூத் அசார், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் உண்மையான தலைவர் முஃப்தி அப்துல் ரவூப் அஸ்கர், மௌலானா அம்மார் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களின் குடியிருப்புகள் உள்ளன.. இவை எல்லாம் அழித்தொழிக்கப்பட்டு உள்ளன. இதற்கு எல்லாம் காரணம் அஜ்மல் கசாப் உளறிக்கொட்டிய சின்ன டிப்தான்! 17 வருடங்கள் முன் அவர் சொன்ன வார்த்தை ஒரு தீவிரவாதியின் குடும்பத்தையே அழித்துள்ளது.. அந்த வகையில் பார்த்தால் இதுவும் பட்டாம்பூச்சி விளைவுதான்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+