Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிளவுபடுத்துறத நிறுத்துங்க.. ஏற்றத்தாழ்வு வேண்டாம்! மத்திய அரசு மீது கொந்தளித்த “கோத்ரேஜ்” தலைவர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டை பிளவுபடுத்துவதுவதை நிறுத்திவிட்டு அரசு மக்களுக்கு அதிக உதவிகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

இந்தியாவில் தொழிலதிபர்கள் பலரும் அரசியல், பொது விவகாரங்கள் தொடர்பாக வெளிப்படையான கருத்துக்களை சொல்வதை தவிர்த்து வருகிறார்கள். குறிப்பாக மத்திய அரசை விமர்சிப்பதை அவர்கள் நிறுத்திக் கொண்டனர்.

மறைந்த பஜாஜ் குழும தலைவர் ராகுல் பஜாஜ், கடந்த 2019 ஆம் ஆண்டு, பழிவாங்கப்படுவோமோ என்ற அச்சம் காரணமாக தொழிலதிபர்கள் பேசாமல் இருக்கின்றனர்." என்று கூறினார். அவரது இந்த கருத்தே அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது.

நதிர் கோத்ரேஜ்

நதிர் கோத்ரேஜ்

இந்த நிலையில் இந்தியாவின் பழமைவாய்ந்த முன்னனி நிறுவனமான கோத்ரேஜின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான நதிர் கோத்ரேஜ் அரசு தொடர்பாக வெளிப்படையான கருத்தை பகிர்ந்து இருக்கிறார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த "பொருளாதாரத்திலும், கல்வி நலத்திட்ட உதவிகளை வழங்குவதிலும் நாடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

பிளவுபடுத்தல்

பிளவுபடுத்தல்

ஆனால், நாட்டை ஒற்றுமையாக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நாட்டை பிளவுபடுத்துவதை நிறுத்திவிட்டு ஒற்றுமை நடவடிக்கைகளில் அரசு ஈடுபட வேண்டும். இது மிகவும் முக்கியமானது என்று நினைக்கிறேன். பொருளாதார வளர்ச்சிக்கு இது முக்கியம். அரசும் இதை அங்கீகரிக்கும் என்று நம்புகிறேன்.

கருத்து சுதந்திரம்

கருத்து சுதந்திரம்

நாங்கள் பொருளாதார மேம்பாட்டில் கவனம் செலுத்தி வருகிறோம். தொழில் நிறுவனங்கள் பொருளாதார மேம்பாட்டில் முடிந்தவரை பங்களிக்கும். அதே நேரம் அரசும் அதிக பணிகளை செய்ய வேண்டும்." என்றார். முன்னதாக நிகழ்வில் பேசிய நதிர் கோத்ரேஜ், கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.

பேச்சுரிமை

பேச்சுரிமை


"அரசின் நீண்ட கரம், தங்களை எதிர்ப்பவர்களின் குரல்களை நசுக்குகிறது. சுறுசுறுப்பான விவாதங்கள் வளர்ச்சியடையும் இடத்தில்தான் யோசனைகள் வெற்றிபெறுகின்றன. இந்த யோசனைகள் வெற்றிபெறுவதற்கு காரணம் அவை சரியாக இருந்ததாலேயே தவிர கவுரவத்தால் அல்ல.

சமத்துவம் தேவை

சமத்துவம் தேவை

நமக்கு வலுவான நிறுவனங்கள் தேவை. கோத்ரேஜ் நிறுவனம் தைரியமான உலகை விரும்புகிறது. அவை பசுமையாக, அழகாக, ஏற்றத்தாழ்வு இல்லாமல் இருக்க விரும்புகிறோம்." என்றார். மத்திய மாநில அரசுகளின் உறவுகள் தொடர்பாக தனது கவலையை வெளிப்படுத்திய அவர், இலவசங்கள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் நகர்வை பாராட்டினார்.

 அதிர் கோத்ரேஜ்

அதிர் கோத்ரேஜ்

அரசாங்கம் பொது சுகாதாரம் மற்றும் கல்விக்கு அதிக நிதியை செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். கடந்த 2019 ஆம் ஆண்டு நதிரின் மூத்த சகோதரர் அதிர் கோத்ரேஜும் இதே கருத்தை வலியுறுத்தி இருந்தார். "நாட்டின் அதிகரித்து வரும் சகிப்பின்மை, வெறுப்புணர்வு, அதனால் நிகழும் குற்றங்களால் நாட்டின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறி இருந்தார்."

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+