ஒரே மாதத்தில் 2-வது முறை.. கட்சிக்குள் அதிரடி மாற்றங்கள்.. "தேர்தல் கணக்கு" பாஜகவின் பிளான் என்ன?
டெல்லி: ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக பாஜக, உள்கட்சியில் பெரிய அளவில் நிர்வாகிகள் மாற்றங்களை கொண்டுள்ளது. 5 மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டே பாஜக இந்த அதிரடி மாற்றங்களை கொண்டு வருவதாக தெரிகிறது.
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது. இதற்கான தேர்தல் வியூகங்கள், கூட்டணி வியூகங்களில் பாஜக தலைமை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், பாஜக உட்கட்சி நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. தேர்தலை மனதில் வைத்து பாஜக முக்கிய பொறுப்புகளில் மாற்றங்களை கொண்டு வந்து இருக்கிறது. இந்த மாத துவக்கத்தில் 4 மாநிலங்களில் பாஜக தலைவரை கட்சி மேலிடம் மாற்றியது.

டெல்லி பாஜக செயல் தலைவராக செயல்பட்டு வந்த வீரேந்திர சச்தேவா மாநில தலைவராக நியமனம் செய்யப்பட்டார். பீகார் மாநில பாஜக தலைவராக இருந்த சஞ்சய் ஜெய்ஸ்வாலுக்குப் பதிலாக பீகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சாம்ராட் சௌத்ரி நியமனம் செய்யப்பட்டார். ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக எம்.பி சிபி ஜோஷிக்கு, ராஜஸ்தான் மாநில தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பாஜகவின் ஒடிசா மாநில தலைவராக முன்னாள் மாநில அமைச்சரான மன்மோகன் சமல் நியமிக்கப்பட்டார்.
இந்த அதிரடி மாற்றங்கள் நடந்து ஏறக்குறைய இரண்டு வாரங்கள் கழித்து, கட்சியில் முக்கிய மாற்றங்களை தேசிய தலைவர் அமித்ஷா மேற்கொண்டு இருக்கிறார். அதன்படி 13 பாஜக தேசிய துணைத் தலைவர்கள், 9 பாஜக பொதுச் செயலாளர்கள், 13 தேசிய செயலாளர்கள் புதிதாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் கர்நாடகாவை சேர்ந்த பாஜகவின் மூத்த தலைவரும், பொறுப்பாளருமான பி.எல்.சந்தோஷ் கட்சியின் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
உத்தரப் பிரதேச மாநில சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக (AMU) முன்னாள் துணைவேந்தர் தாரிக் மன்சூர் பாஜக தேசிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தெலங்கானா மாநில முன்னாள் பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் அந்த கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். அண்மையில் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஏ.கே.அண்டனியின் மகனுமான அனில் ஆண்டனி பாஜகவின் தேசியச் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
பாஜகவின் பொதுச் செயலாளர்களாக இருந்த சி.டி.ரவி மற்றும் திலிப் சாய்கியா ஆகியோர் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். பீகாரை சேர்ந்த பாஜக எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராதா மோகன் சிங், பாஜக துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பாஜக கட்சியில் மேற்கொண்டு வரும் இந்த மாற்றங்கள் சமூக பிரதிநித்துவம் என்ற பாஜகவின் புதிய யுக்தியின் ஒரு அங்கமாக பார்க்கப்படுகிறது. அதேவேளையில், அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வகையில் கட்சியை கொண்டு செல்கிறோம் என காட்டிக்கொள்வதாக சிறுபான்மை சமூகத்தினருக்கும் கட்சியில் முக்கிய பிரநிதித்துவம் கொடுக்க பாஜக மெனக்கெடுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்தாக உள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications