டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்துமாறு அரசுக்கு மாணவர்கள், பெற்றோர்கள் அழுத்தம்.. ரமேஷ் போக்ரியால்

Google Oneindia Tamil News

டெல்லி: நீட், ஜே.இ.இ. தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்துமாறு மாணவர்களும் பெற்றோர்களும் அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்தார்.

Recommended Video

    NEET, JEE தேர்வுகளுக்கு எதிராக ஒன்றிணையும் முதல்வர்கள்.. உச்சநீதிமன்றத்தில் முறையிட முடிவு

    இதனிடையே நீட், ஜே.இ.இ. தேர்வுகள் திட்டமிட்டபடி கட்டாயம் நடைபெறும் என்றும். தேர்வு எழுத வருவதற்கு மாணவர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும
    தேர்வு மையங்கள் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தயாராக உள்ளன என்றும் தேசிய தேர்வு முகமை இயக்குநர் வினித் ஜோஷி தெரிவித்தார்.

    ஜேஇஇ தேர்வு செப்டம்பர் 1 முதல் 6 வரை நடைபெறவுள்ளது. நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அரசின் முடிவுக்கு மாணவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் நுழைவுத் தேர்வுகளை நடத்துவதில் நியாயமற்றது என்று கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது.

    ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, மனிஷ் சிசோடியா, நவீன் பட்டாநாயக் மற்றும் பல அரசியல்வாதிகள் ட்வீட் செய்துள்ளனர். ஒடிசா முதல்வர் பட்நாயக் மற்றும் மேற்கு வங்க முதல்வர் பானர்ஜி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

    நடப்பாண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம்நடப்பாண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம்

    7 மாநில முதல்வர்கள்

    7 மாநில முதல்வர்கள்

    இந்த ஆண்டு நீட் தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து இதேபோல் தமிழக சுகாதாராத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி 7 பாஜக அல்லாத மாநில முதல்வர்கள் மாநாட்டை நடத்தினார். இதில் 7 மாநில முதல்வர்கள் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வை நடத்துவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளன.

    ரமேஷ் போக்ரியால்

    ரமேஷ் போக்ரியால்

    மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தொடர்ந்து தேர்வுகளை நடத்த எங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள் என மத்திய மனிதவளமேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் டிடி நியூஸுக்கு அளித்த பேட்டியில் கூறினார். அவர் மேலும் கூறுகையில். ஜே.இ.இ மெயின் 2020 மற்றும் நீட் 2020 தேர்வு தேதிகள் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் இறுதி செய்யப்பட்டுள்ளது. முழு கல்வியாண்டையும் வீணடிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

    ஹால் டிக்கெட் டவுன்லோடு

    ஹால் டிக்கெட் டவுன்லோடு

    ஜே.இ.இ. தேர்வை விரும்புகிறார்கள். 85% பேர் ஏற்கனவே தேர்வுகளில் பங்கேற்பதற்காக ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்துவிட்டார்கள். ஜே.இ.இ.க்கு பதிவு செய்த மொத்த 8.85 லட்சம் மாணவர்களில், 7.25 லட்சம் மாணவர்கள் ஏற்கனவே ஜே.இ.இ மெயின் 2020 அட்மிட் கார்டுகளை பதிவிறக்கம் செய்துள்ளனர் என்றார்.

    எதிர்காலத்திற்கு இடையூறு

    எதிர்காலத்திற்கு இடையூறு

    ஐ.ஐ.டி டெல்லி இயக்குனர் வி ராம்கோபால் ராவ் கூறுகையில், ஜே.இ.இ மற்றும் நீட் ஆகியவற்றை மேலும் ஒத்திவைப்பது கல்வி ஆண்டில் "கடுமையான விளைவுகளை" ஏற்படுத்தக்கூடும், ஏனெனில் இது வேறு பல விஷயங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் இது மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும். ஆறு மாதங்களாக புதிய வகுப்புகள் தொடங்கப்படவில்லை.. செப்டம்பர் மாதத்தில் தேர்வுகள் நடத்தப்பட்டால் தான், ஐ.ஐ.டி.கள் குறைந்தபட்சம் புதிய வகுப்புகள் டிசம்பரில் தொடங்கும் என்று அவர் கூறினார்.

    தேர்வு ஒத்திவைக்க வாய்ப்பில்லை

    தேர்வு ஒத்திவைக்க வாய்ப்பில்லை

    இதற்கிடையில், தேர்வுகளை நிறுத்துமாறு மத்திய அரசை கேட்டு முக்கியமான குரல்கள் கூடி வரும் நிலையில், மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் உயர்மட்ட வட்டாரம் கூறும் போது, ஜே.இ.இ மெயின் 2020 மற்றும் நீட் 2020 ஆகியவற்றை நிறுத்தும் எந்த திட்டமும் இல்லை என்று கூறியது.

    English summary
    Education Minister Ramesh Pokhriyal said that students and parents have been pressuring the government to hold JEE and NEET and not postpone it.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X