சி.பி.ஐ. இயக்குனராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமனம்!
டெல்லி: சி.பி.ஐ. புதிய இயக்குனராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சி.பி.ஐ. இயக்குனராக இருந்த ரிஷிகுமார் சுக்லா கடந்த பிப்ரவரி மாதம் ஓய்வுபெற்றார். அதன்பின்னர் அந்த பதவி காலியாக இருந்து வந்தது. சி.பி.ஐ கூடுதல் இயக்குனர் பிரவீன் சின்ஹா கூடுதல் பொறுப்பாக இதனை கவனித்து வந்தார்.

இதற்கிடையே புதிய சி.பி.ஐ. இயக்குனரை தேர்ந்தெடுப்பதற்காக விதிமுறைகளின்படி பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆகியோர் ஒன்று கூடி நேற்று ஆலோசனை நடத்தினர்.
இந்த நிலையில் சி.பி.ஐ. புதிய இயக்குனராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இவர் 2 ஆண்டுகள் பணியில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1985ம் ஆண்டு மகாராஷ்டிராவில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்த ஜெய்ஸ்வால் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் இயக்குனர் ஜெனரலாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications