'பயமா? மன்னிப்பு கேளுங்க..' சீனா ஆக்கிரமிப்பு குறித்து பிரதமருக்கு சுப்பிரமணிய சுவாமி அட்வைஸ்
டெல்லி: லடாக்கில் இந்தியாவின் எல்லைப் பகுதியில் 18 கி.மீ உள்ளே சீனா ராணுவம் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை அறிக்கைகள் வெளியாகியுள்ளன. ஆனால் இது குறித்து பிரதமர் தரப்பில் எவ்வித பதிலும் தரப்படவில்லை.
இந்த பிரச்னை தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில் பிரதமருக்கு இந்திய மக்கள் மீது அன்பிருந்தால் சீனாவின் ஆக்கிரமிப்புக்கு மன்னிப்பு கேட்டிருப்பார் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.
குஜராத்தில் நேற்று முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. அதுபோல வரும் 5ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பிரதமர் மீது இது குறித்தான குற்றச்சாட்டு அதிகம் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஆக்கிரமிப்பு
லடாக்கின் வடக்கு பகுதியில் உள்ள 'டெப்சாங் சமவெளியில்' சீன ராணுவம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் பதுங்கு குழிகளையும், 200க்கும் அதிகமான கூடாரங்களை சீன ராணுவம் அமைத்திருப்பதாக உளவுத்துறை கொடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெப்சாங் சமவெளி பகுதி என்பது இந்தியா வெளியிட்டிருக்கும் அதிகாரப்பூர்வ வரைபடத்தில் இந்திய எல்லைக்குள் அமைந்திருக்கும் ஒரு பகுதியாகும். ஆக இந்திய எல்லையில் சீனா ஊடுருவிவிட்டது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. இந்நிலையில், பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமியும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

சுப்பிரமணிய சுவாமி
இது தொடர்பாக தனது டிவிட்டரில், "பிரதமர் மோடிக்கு இந்திய நிலப்பரப்பின் மீது அன்பு இருக்கிறதா? அப்படி இருந்திருந்தால் இந்த ஆக்கிரமிப்பு குறித்து அவர்கள் மன்னிப்பு கேட்டிருக்கலாம். சீனாவை கண்டு அவர் அஞ்சுகிறார் எனில், பாரதமாதாவின் நிலத்தை அவரால் எப்போது மீட்க முடியும்?" என்று கேள்வியெழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் பிரதமர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்திருந்த நிலையில், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி இவ்வாறு விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெப்சாங் சமவெளியானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 16,000 அடி உயரத்தில் 972 சதுர கி.மீ பரப்பளவில் இந்திய எல்லை கோட்டுக்கு 18 கி.மீ உள்ளாக அமைந்திருக்கிறது.

உளவு அமைப்பு
இந்த பகுதியில் சீனா தனது கட்டமைப்புகளை அதிகப்படுத்தி வருவதாகவும், இது உடனடியாக தடுக்கப்படாவிடில் இந்நிலப்பரப்பு முழுவதுமாக சீனாவின் கைகளுக்கு சென்றுவிடும் என இந்தோ-திபெத்திய படையின் உளவு பிரிவினர் எச்சரித்துள்ளனர். ஏற்கெனவே அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா தான் ஆக்கிரமித்த இடத்தில் புதிய கிராமங்களை உருவாக்கி இருந்தது. வெறுமென ராணுவ முகாம்கள், பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டிருந்தால் பேச்சுவார்த்தை மூலம் அதனை நம்மால் காலி செய்ய வைக்க முடியும். ஆனால் மக்கள் தங்குமிட என வந்துவிட்டால் மீண்டும் அந்த இடத்தை கைப்பற்றுவது என்பது நடக்காத காரியமாகும். எனவே டெப்சாங் சமவெளியில் புதிய கிராமங்கள் உருவாக்கப்படுவதற்குள் இழந்த நிலத்தை மீட்க வேண்டும் என உளவுப் பிரிவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

காரணம்
இது குறித்து முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல் ஒருவர் கூறுகையில், "இந்த ஆக்கிரமிப்பு இந்தியாவின் இறையாண்மைக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. சீன ராணுவம் தொடர்ந்து டெப்சாங் சமவெளியில் தங்களை வலுப்படுத்தி வருகிறது. இதன் மூலம் அவர்கள் பின்வாங்க விரும்பவில்லை என்பது தெளிவாகிறது. இந்த ஆக்கிரமிப்பு விவகாரங்களை பொறுத்த அளவில் இரு நாடுகள் தரப்பில் பேச்சு வார்த்தைகள் நடக்கும்போது சீனா 1959 நிலைப்பாட்டிலேயே கறாராக நிற்கிறது. அதாவது, கால்வான் பள்ளத்தாக்கு வரை உள்ள இடங்கள் சீனாவுக்கு சொந்தமானது என்பதுதான் அந்த நிலைப்பாடு. ஆனால் இந்தியா இதனை தொடர்ந்து மறுத்து வருகிறது. இதுதான் தற்போதைய பிரச்னைக்கு முழு காரணமாகும்" என்று கூறியுள்ளார்.
-
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்!












Click it and Unblock the Notifications