மோடி, ஷா எனக்கே “ஸ்கெட்ச்” போடுறாங்களா? ஹரேன் பாண்டியா கொலையின் மர்மம்.. சுப்ரமணியன் சாமி பரபர பதிவு
டெல்லி: கடந்த 2003 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட குஜராத் முன்னாள் அமைச்சர் ஹரேன் பாண்டியாவுக்கு நடந்ததைபோல் தனக்கும் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் திட்டமிடவில்லை என்று தான் நம்புவதாக பாஜக முன்னாள் எம்பி சுப்ரமணியன் சாமி பரபரப்பு கருத்து ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்.
முன்னாள் பாஜக எம்.பியும், பாஜக மூத்த தலைவருமாக இருந்த சுப்பிரமணியன் சாமி கடந்த சில மாதங்களாகவே மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியையும், அரசையும் கடுமையாக ட்விட்டரில் விமர்சித்து வருகிறார்.
குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை விமர்சித்து தொடர்ந்து ட்விட்டரில் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். இது அரசியல் அரங்கில் பெரும் விவாதப்பொருளாக மாறி வருகிறது.

ஆசிய கோப்பை தோல்வி
கடந்த செப்டம்பர் மாதம் இந்திய அணி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து வெளியேறியது பற்றி பாஜக முன்னாள் எம்.பி. சுப்ரமணியன் சாமி ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், "ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ஏற்பாட்டாளர்கள் யார்?, அதில் நாம் ஏன் மோசமாக வீழ்த்தப்பட்டோம்? கிரிக்கெட் சூதாட்டமா? அப்பாவியாக கேட்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

ஜெய்ஷா மீது அட்டாக்
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இருப்பவர் ஜெய் ஷா. பிசிசிஐ செயலாளராக இருக்கும் இவர்தான் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனான இவர் மீது பல்வேறு விமர்சனங்கள் உள்ள நிலையில் பெயர் குறிப்பிடாமல் இத்தகைய விமர்சனத்தை முன்வைத்து உள்ளார் சுப்பிரமணியன் சாமி.

சுப்பிரமணியன் சாமி ட்வீட்
இந்த நிலையில் இன்று ட்விட்டரில் பதிவிட்டு உள்ள சுப்பிரமணியன் சாமி, "பிரதமர் மோடியும் அமித்ஷாவும் ஹரேன் பாண்டியாபோல் என் மீது திட்டமிடவில்லை என்று நான் நம்புகிறேன். அது உண்மையென்றால் என்னுடைய நண்பர்களுக்கு நான் எச்சரிக்கை விடுக்க வேண்டும். எனக்கு என்ன கிடைக்கிறதோ, அதை திரும்பி தருவேன் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த இருவர் ஆர்.எஸ்.எஸ். உயர்மட்டத்தில் இருப்பவர்களை கூட அவமானப்படுத்தி உள்ளனர்." என்று பதிவிட்டு உள்ளார்.

கேள்விக்கு பதில்
இதற்கு சுதிர்தா மிஸ்ரா என்பவர் ட்விட்டரில், "அப்படியென்றால் ஹரேன் பாண்டியா கொலையில் இரட்டையரை குற்றம்சாட்டுகிறீர்களா?" என்று கேட்க, ஹரேன் பாண்டியா பாஜகவில் இருந்து ஒதுக்கப்பட்டார் என்று சுப்பிரமணியன் சாமி பதில் கொடுத்துள்ளார்.

ரீட்வீட்
பாலாஜி என்ற நபர், "சார், பாதுகாப்பான இடத்துக்கு சென்றுவிடுங்கள். ஹரேன் பாண்டியவுக்கு என்ன நடந்தது என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். உங்களுக்கு எதிரான மோடி - ஷாவின் திட்டம் இது. நீதிமன்றம் உங்களை பாதுகாக்கும் என்று நம்புகிறேன்." என்று பதிவிட்டார். இதை சுப்ரமணியன் சாமி ரீட்வீட் செய்துள்ளார்.

யார் இந்த ஹரேன் பாண்டியா?
சிறுவயதில் இருந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணைந்து பணியாற்றி பின்னர் பாஜகவில் இணைந்த ஹரேன் பாண்டிய அம்மாநிலத்தின் உள்துறை அமைச்சராக பணியாற்றினார். குஜராத் முன்னாள் முதலமைச்சரான கேஷுபாய் பட்டேலின் ஆதரவாளரான ஹரேன் பாண்டியா, நரேந்திர மோடி தலைமையில் தேர்தலை சந்திக்க மறுத்தார்.

ஹரேன் பாண்டியால் கொலை
2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்துக்கு பிறகு இரு தரப்பையும் அழைத்து அமைதிப்பேச்சுவார்த்தை நடத்த முயன்ற ஒரே தலைவர் இவர்தான். மோடி - அமித்ஷா இணைக்கு எதிர்கோஷ்டியாக கருதப்பட்ட ஹரேன் பாண்டியா கடந்த 2003 ஆம் ஆண்டு அஹமதாபாத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதற்கு மோடி - அமித்ஷா காரணம் என்று ஹரேன் பாண்டியாவின் மனைவி மற்றும் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications