32 வருடங்களில்.. 4 மடங்காக எகிறியடித்த சர்க்கரை நோய்.. வெளியான ரிப்போர்ட்.. நீரிழிவு நோயாளி அலர்ட்
டெல்லி: கடந்த 32 ஆண்டுகளில் 4 மடங்காக சர்க்கரை நோய் தாக்கம் அதிகரித்திருக்கிறதாம்.. கடந்த 1990 ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2022-ல் உலகளாவிய நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, நான்கு மடங்கு உயர்ந்துள்ளதாக பகீர் தகவல் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது. இது உலக மக்களை கவலைக்கும், அதிர்ச்சிக்கும் ஆளாக்கி வருகிறது.
நம்முடைய இந்தியாவை பொறுத்தவரை, மக்கள் தொகை அடிப்படையில் கோவாவில் 26.4 சதவீதமும், புதுவையில் 26.7 சதவீதமும் சர்க்கரை நோயாளிகள் உள்ளனர்.. தமிழகத்தில் மட்டும் 14.4 சதவீதத்தினரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்...

ஆய்வுகள்: கடந்த 2021ம் ஆண்டு, உலகளவில் 537 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயுடன் வாழ்வதாக சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு International Diabetes Federation (IDF) தெரிவித்திருந்தது.. இது இப்படியே தொடரும்போது, வரும் 2030 ஆண்டுக்குள் 643 மில்லியனாக அதிகரிக்குமாம். இந்தியாவில் சுமார் 10 கோடி பேருக்கு நீரிழிவு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த எண்ணிக்கை அடுத்த 20 வருடங்களில் இரு மடங்காகும் என்று எச்சரித்திருந்தார்கள்.
அதுமட்டுமல்ல, உலக அளவில் உறுதி செய்யப்படும் 7 சர்க்கரை வியாதிகளில் ஒருவர் இந்தியராக இருக்கிறார்களாம்.. அதிலும், 19 வயதுக்குட்பட்டவர்களில் 5 பேரில் ஒருவருக்கு டைப்-1 வகை சர்க்கரை வியாதி இருப்பதாகவும், டைப்-1ஐ பொறுத்தவரை உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்புகள், கணையத்தில் உள்ள இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை சேதப்படுத்துவதால், இவர்களுக்கு தினமும் இன்சுலின் ஊசி போட வேண்டிய சூழல் வந்துள்ளதாகவும் கூறப்பட்டது.
வாழ்க்கை முறை: அதனால், வாழ்க்கை முறையில் மாற்றங்களை செய்யாவிட்டால் டைப்-2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று டாக்டர்கள் அப்போதே எச்சரித்தனர். ஏனென்றால் சர்க்கரை நோய் பாதிப்பு வந்துவிட்டாலே, கண் பார்வையிழப்பு, சிறுநீரக பாதிப்பு, மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம் என்று உலக சுகாதார நிறுவனமும் அவ்வப்போது அறிவுறுத்தி கொண்டேயிருக்கிறது.
நீரிழிவு நோயின் பரவல் எல்லா நாடுகளிலும் வேகமாக அதிகரித்துள்ள நிலையில், இந்தியா உலகளவில் இரண்டாவது இடத்திலும் இருந்தது.. ஆனால், தற்போதைய ஆய்வில், இந்தியா முதலிடத்தை பிடித்து, நாட்டு மக்களுக்கு கவலையையும், அதிர்ச்சியையும் தந்து வருகிறது.
ஆய்வுகள்: நவம்பர் 14ம் தேதி வருடந்தோறும் சர்வதேச நீரிழிவு நோய் விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, "தி லான்செட் மெடிக்கல் ஜர்னலில்" வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளில் இதுகுறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தி லான்செட் அறிக்கையின்படி, "2022ம் ஆண்டில், உலகில் சுமார் 828 மில்லியன் பெரியவர்கள் (18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்) நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 4ல் ஒரு பங்கிற்கு மேல், அதாவது சுமார் 21.2 கோடி பேர் இந்தியர்கள் ஆவர். கடந்த 1990 ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2022-ல் உலகளாவிய நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்திருக்கிறது.
பாகிஸ்தான்: இந்தியாவுக்கு பிறகு, பிறகு, சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் சீனா 14.8 கோடியும், அமெரிக்கா 4.2 கோடியும், பாகிஸ்தான் 3.6 கோடியும், இந்தோனேசியா 2.5 கோடியும், பிரேசில் 2.2 கோடியும் உள்ளன.
ஆய்வின்படி, 1990 மற்றும் 2022 க்கு இடையில் சர்க்கரை நோய் ஆபத்து ஆண்கள் (6.8% முதல் 14.3%) மற்றும் பெண்களில் (6.9% முதல் 13.9% வரை) இரட்டிப்பாகியுள்ளது.. குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலேயே இதன் அதிகமாக தாக்கம் இருக்கிறது. சில உயர் வருமானம் கொண்ட நாடுகள் (ஜப்பான், கனடா, மற்றும் பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் மேற்கு ஐரோப்பாவின் டென்மார்க்) கடந்த 30 வருடங்களாகவே நீரிழிவு நோயின் நிகழ்வில், லேசான சரிவு தென்பட்டது.
ஆண்கள்: இந்தியாவில் பெண்கள் மற்றும் ஆண்களிடையே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட டபுள் மடங்காக அதிகரித்துள்ளது. பெண்களுக்கான விகிதம் 1990ல் 11.9% ஆக இருந்தது, இது 2022ல் 24% ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், இந்த காலகட்டத்தில் ஆண்களில் இந்த விகிதம் 11.3%லிருந்து 21.4% ஆக அதிகரித்துள்ளது.
நீரிழிவு நோய் குறித்த என்சிடி-ரிஸ்க் மேற்கொண்ட இந்த ஆய்வில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளரும், கேமரூனில் உள்ள "யாவுண்டே 1" பல்கலை பேராசிரியருமான ஜீன் கிளாட் எம்பன்யா சொல்லும்போது, "நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதையே இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.. முக்கியமாக சிகிச்சையளிக்கப்படாத நீரிழிவு நோயாளிகள், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் அதிகமாக வாழ்கிறார்கள்.
பரிசோதனைகள்: சிகிச்சையளிக்கப்படாத நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள், நோய் பாதிப்பை உறுதி செய்திருக்க மாட்டார்கள். அதனால் இந்த நாடுகள்ல நீரிழிவு நோய் பரிசோதனையை அதிகரிப்பது அவசர முன்னுரிமையாக இருக்க வேண்டும். கண்டறியப்படாத நீரிழிவு நோய், பார்வை இழப்பு உள்ளிடட பல்வேறு கண் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்" என்றார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications