Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமணமாகாமல் கர்ப்பமான பெண்.. 24 வார கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி.. தீர்ப்பில் சொன்னது என்ன?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மருத்துவ கருக்கலைப்பு சட்டத்தில் உச்சநீதிமன்றம் தற்போது புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி திருமணமாகாத, ஆனால் சேர்ந்து வாழ்ந்து கருவுற்ற பெண்ணின் 24 வார கருவை கலைப்பதற்கும் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்கெனவே இவ்வாறு கருவை கலைக்க முடியாது என கூறியிருந்த நிலையில் தற்போது உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

டெல்லியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தான் திருமணம் செய்துகொள்ளாமல் இணையருடன் சேர்ந்து வாழ்ந்து வந்ததாகவும், இதற்கிடையில் தான் கருவுற்றதாகவும் வழக்குதொடுத்தார்.

வழக்கில் 23 வாரங்களுக்கு மேல் வளர்ந்த அந்த கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அனுமதி

அனுமதி

பெண்ணுடன் இருந்த நபர் தன்னை திருமணம் செய்ய மறுத்துவிட்டதால் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் அவர் மனுவில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டிஒய்.சந்திரசூட், சூர்யகாந்த் மற்றும் கோபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு மேற்குறிப்பிட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். மேலும், எய்ம்ஸ் மருத்துவமனை ஒரு மருத்துவக்குழுவை உருவாக்க வேண்டும் என்றும் வழிகாட்டியுள்ளனர்.

மருத்துவர்கள்

மருத்துவர்கள்

அதன்படி இந்த குழுவில் இரண்டு மருத்துவர்கள் இடம்பெற வேண்டும் என்றும், இந்தக்குழுவானது சம்பந்தப்பட்ட பெண்ணின் கருவை பாதுகாப்பான முறையில் கலைக்க முடியுமா என்பது குறித்து ஆராய்ந்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மருத்துவ கருக்கலைப்பு சட்டம் 3(2)(d)ன் அடிப்படையில் உத்தரவிட்டனர். ஒரு வேளை பாதுகாப்பான முறையில் கருவை கலைக்க முடியும் எனில் அதற்கான நடவடிக்கையை எய்ம்ஸ் மருத்துவமனை மேற்கொள்ளும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

விசாரணை

விசாரணை

முன்னதாக இருந்த கருக்கலைப்பு மருத்துவ சட்டம் 2021ல் பிரிவு 3ல் கணவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை உச்சநீதிபதிகள் தற்போது 'பார்ட்னர்' என மாற்றியமைத்துள்ளனர். இதன் காரணமாக இந்த கருக்கலைப்பு சட்டரீதியாக அனுமதிக்கப்படுகிறது. முன்னதாக இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது கருவை கலைக்க முடியாது என நீதிமன்றம் திட்டவட்டமாக கூறிவிட்டது

பின்னணி

பின்னணி

டெல்லி நீதிமன்றத்தின் வழக்கு விசாரணை பின்னணி; இந்த மனு தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் மருத்துவக் கருத்தரிப்பு விதி 2003 பிரிவு 3(2)(பி)ன்படி கருத்தொற்றுமையுடன் திருமணம் செய்துகொள்ளாமல் வாழும் இணையர் கருவுற்றிருந்தால் அதிலும் அக்கரு 20 வாரங்களை கடந்திருந்தால் அவற்றை கலைக்க அனுமதி அளிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

விதி என்ன?

விதி என்ன?

இந்த மருத்துவ விதியானது பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், சிறுமிகள், கருத்தரித்தலில் குறைபாடு உள்ள பெண்கள் ஆகியவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் நீதிபதிகள் விளக்கமளித்தனர். மேலும், இந்த மனுவின் மீதான இறுதி தீர்ப்பை நிலுவையில் வைத்து ஆகஸ்ட் 26 ஆம் தேதிக்குள் மனு மீதான பதிலைத் தாக்கல் செய்யுமாறு டெல்லி சுகாதார மற்றும் குடும்ப நலத் துறைக்கு நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

 கருவை கலைப்பது

கருவை கலைப்பது

முன்னதாக விசாரணையின் போது இந்த கருவை கலைப்பது குழந்தையை கொல்வதற்கு சமம் என்று கூறிய நீதிபதிகள், அதேபோல குழந்தையை தத்து கொடுக்கலாம் என்றும் ஆலோசனை வழங்கினர். பின்னர் உணவு இடைவேளையின்போது தம்பதியினருக்கு ஆலோசனை வழங்க அறிவுறுத்தப்பட்டது. உணவு இடைவெளிக்கு பிறகு மீண்டும் விசாரணை தொடங்கிய நிலையில், கருவை கலைப்பதில் தம்பதியினர் உறுதியாக இருப்பதை அவர்களது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும் இந்த கரு தொடர்வது பெண்ணின் உடல் மற்றும் மன நலனில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.

 வற்புறுத்தவில்லை

வற்புறுத்தவில்லை

இதனையடுத்து குழந்தையை தாங்கள் வளர்க்க வற்புறுத்தவில்லை என்று தெளிவுபடுத்திய நீதிபதிகள், குழந்தை தத்து கொடுக்கவும் அறிவுறுத்தினர். இதற்காக நீண்ட வரிசைகள் காத்து கிடக்கின்றன என்று கூறிய அவர்கள் மட்டுமல்லாது அரசு அல்லது மருத்துவமனைகள் இந்த குழந்தையை பேணி காக்கும் என்றும் கூறினர். அப்படி ஏதேனும் பொருளாதார தேவை ஏற்படுமாயின் அதற்கு நாங்கள் உதவ தயார் என்றும் அவர்கள் கூறினர்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபிலிடம் நீதிபதிகள் ஆலோசனை கேட்டனர். அவரும் கருவை கலைப்பது கூடாது எனக்கூறினார். இதனையடுத்து கருவை கலைக்க உத்தரவிடமுடியாத என நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+