டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தன்பால் ஈர்ப்பாளர்கள் திருமணத்திற்கு அங்கீகாரம்? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பரபர உத்தரவு

Google Oneindia Tamil News

டெல்லி: தன்பால் ஈர்ப்பாளர்கள் திருமணம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் சில முக்கிய கருத்துகளைக் கூறி உள்ளது.

உலகெங்கும் தன்பால் ஈர்ப்பாளர்கள் புறக்கணித்து வைக்கப்படுவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தங்கள் உரிமைகளுக்காக தன்பால் ஈர்ப்பாளர்கள் தொடர்ந்து போராடி வேண்டிய சூழலே தான் இன்னும் உள்ளது.

காதலுக்கு எப்படி சாதி, மதம் இல்லையோ அதேபோல பாலினங்களும் இல்லை என்பது இவர்கள் வாதம். தன்பால் ஈர்ப்பாளர்களை தனியாக ஒதுக்கி வைப்பதே தவறு என்று கூறி தன்பால் ஈர்ப்பாளர்கள் உரிமைக்காகப் போராடி வருகின்றனர்.

 6500 மரணங்கள், நோ செக்ஸ், தன்பால் ஈர்ப்பு தடை! கால்பந்து உலக கோப்பை சுற்றியிருக்கும் பரபர சர்ச்சைகள் 6500 மரணங்கள், நோ செக்ஸ், தன்பால் ஈர்ப்பு தடை! கால்பந்து உலக கோப்பை சுற்றியிருக்கும் பரபர சர்ச்சைகள்

 தன்பால் ஈர்ப்பு

தன்பால் ஈர்ப்பு

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தன்பால் ஈர்ப்பாளர்களுக்கு சீக்கிரமாகவே சட்டப்படி பாதுகாப்பு வழங்கப்பட்டன. உலகில் மிகப் பழமையான ஜனநாயகங்களில் ஒன்றான அமெரிக்காவில் கூட கடந்த 2003ஆம் ஆண்டு முதல் நாடு முழுக்க தன்பால் ஈர்ப்பாளர்ப்பு சட்டப்படி குற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டது. அதேநேரம் இந்தியாவில் கடந்த 2018 முதல் தன்பால் ஈர்ப்பு சட்டப்படி குற்றம் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும், இன்னும் கூட குழந்தைகளைத் தத்தெடுப்பது உள்ளிட்ட விஷயங்களில் பிரச்சினை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

 உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

இதற்கிடையே இரு தன்பால் ஈர்ப்பு ஆண்கள் தங்கள் திருணத்தைப் பதிவு செய்து சட்டப்பூர்வமான அங்கீகாரம் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கைத் தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதி ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தன்பால் ஈர்ப்பாளர்கள் திருமணத்தைச் சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்வது தொடர்பாகப் பதிலளிக்கக் கோரி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

உத்தரவு

உத்தரவு

மேலும், இந்த தன்பால் ஈர்ப்பார்கள் திருமணம் செய்து கொள்வது தொடர்பாக மத்திய அரசு மற்றும் இந்திய அட்டர்னி ஜெனரலும் பதிலளிக்குமாறு தனியாக மற்றொரு நோட்டீஸையும் அனுப்பியது. இதையடுத்து வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது. தன்பால் ஈர்பாபளர்களின் திருமணத்தை அங்கீகரிக்காதது பாரபட்சம் என்று ஐதராபாத்தைச் சேர்ந்த தன்பால் ஈர்ப்பு ஜோடியான சுப்ரியோ சக்ரவர்த்தி மற்றும் அபய் டாங் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

 அடிப்படை உரிமை மீறல்

அடிப்படை உரிமை மீறல்

அதேபோல இரண்டாவது மனுவை தன்பால் ஈர்ப்பாளர் தம்பதிகளான பார்த் ஃபிரோஸ் மெஹ்ரோத்ரா மற்றும் உதய் ராஜ் ஆகியோர் தாக்கல் செய்து இருந்தனர். LGBT பிரிவைச் சேர்ந்த நபர்களுக்குத் தாங்கள் விரும்பும் நபரைத் திருமணம் செய்து கொள்ளும் உரிமை உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் இந்த தம்பதிகள் தங்கள் மனுக்களில் குறிப்பிட்டனர். மேலும், தன்பால் ஈர்பபாளர்களின் திருமணத்தை அங்கீகரிக்காமல் இருப்பது, அரசியலமைப்பின் 14 மற்றும் 21ஆவது பிரிவின் கீழ் அடிப்படை உரிமையை மீறுவதாகும் என்றும் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

 அனுமதிப்பதில்லை

அனுமதிப்பதில்லை

இருப்பினும், இந்திய சட்டப்படி தன்பால் ஈர்ப்பாளர்கள் அவர்களுக்குப் பிடித்த நபரைத் திருமணம் செய்து கொள்வதை அனுமதிக்கவில்லை.. எனவே, நமது அரசியலமைப்பு சட்டம் தரும் உரிமையை நிலைநாட்டும் வகையில், தன்பால் ஈர்ப்பாளர்கள் விரும்பும் நபரைத் திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தான், இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

 2018 தீர்ப்பு

2018 தீர்ப்பு

கடந்த 2018ஆம் ஆண்டு செப். மாதம் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு இந்த விவகாரத்தில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது. 158 ஆண்டுகள் பழமையான காலனித்துவ காலச் சட்டமான ஐபிசி 377படி தன்பால் ஈர்ப்பு தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது. இதை நீக்கிய அரசியல் சாசன அமர்வுக்கு தலைமை தாங்கிய அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, "சாதாரண மக்களுக்கு இருக்கும் அனைத்து உரிமைகளும் எல்ஜிபிடி சமூகத்துக்கும் உள்ளன. தன்பால் ஈர்ப்பைக் குற்றமாக்குவது பகுத்தறிவற்றது மற்றும் பாதுகாப்பற்றது" என்று தீர்ப்பு அளித்தனர்.

English summary
Supreme Court sought the Centre’s response on pleas seeking registration of same-sex marriages under the Special Marriage Act: Is same sex marriage is legal in india.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X