காவிரி நதிநீர் வழக்கு: நீதிபதி பிஆர் கவாய் தலைமையில் 3 நீதிபதிகளை கொண்ட புதிய பெஞ்ச் அறிவிப்பு!
டெல்லி: காவிரி நதிநீர் வழக்கை நீதிபதி பிஆர் கவாய் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிபதி பிஆர் கவாய் தலைமையிலஆன இந்த பெஞ்ச்சில் நீதிபதிகள் பிஎஸ் நரசிம்மா, பிகே மிஸ்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த வழக்கு வரும் 25-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.
தமிழ்நாட்டுக்கு ஆகஸ்ட் மாதத்தில் கர்நாடகா 53 டிஎம்சி காவிரி நீரை திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை 15 டிஎம்சி காவிரி நீர் மட்டுமே கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. இது தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தமிழ்நாடு அரசு பிரதிநிதிகள் முறையிட்டனர். ஆனால் காவிரி மேலாண்மை ஆணையம் காவிரியில் 10,000 கன அடி நீரை மட்டும் 10 நாட்களுக்கு திறந்துவிட உத்தரவிட்டது. இதற்கு தமிழ்நாடு பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. காவிரி நதிநீர் வழக்கை விசாரிக்க புதிய பெஞ்ச் அமைக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது.
இதனிடையே தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிடக் கூடாது என கர்நாடகாவில் பாஜக நேற்று போராட்டத்தைத் தொடங்கி வைத்தது. இதனைத் தொடர்ந்து இன்று மாண்டியாவில் கர்நாடகா விவசாயிகளும் தமிழ்நாட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின் போது மைசூர்- பெங்களூர் சாலையில் மறியல் செய்யவும் கர்நாடகா விவசாயிகள் முயன்றனர். தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிடக் கூடாது பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் காவிரி நதிநீர் கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை விசாரிக்க புதிய பெஞ்ச் நீதிபதிகளை உச்சநீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. நீதிபதிகள் பிஆர் கவாய், பிஎஸ் நரசிம்மா மற்றும் பிகே மிஸ்ரா ஆகியோர் அடங்கிய புதிய பெஞ்ச் உச்சநீதிமன்றத்தால் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் வழக்கை இந்த புதிய பெஞ்ச் வரும் 25-ந் தேதி விசாரிக்க இருக்கிறது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications