தேர்தல் பத்திரங்கள் மூலம் வெள்ளையாகும் கறுப்பு பணம்.. உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
டெல்லி: அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறுவதற்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்க இருக்கிறது.
'தேர்தல் பத்திரங்கள் மூலம் அஹ்ல் கட்சிகளுக்கு நிதி' என்கிற விவகாரம் அண்மைகாலமாக விஸ்வரூபம் எடுத்து பெரும் விவாதப் பொருளாகி இருக்கிறது. பொதுவாக அரசியல் கட்சிகள் ரூ20,000க்கும் அதிகமாக ஒருவரிடம் நன்கொடை பெற்றால் இதன் முழு விவகரத்தை தேர்தல் ஆணையத்திடம் வழங்க வகை செய்தது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம். ஆனால் 2018-ல் இந்த சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்த மத்திய பாஜக அரசு, தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை அரசியல் கட்சிகள் பெற்றால் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க தேவை என மாற்றிவிட்டது.

பெருமளவு நிதி பெற்ற பாஜக: இந்த திருத்தத்துக்குப் பின்னர் அரசியல் கட்சிகளின் கல்லா பெட்டி பெருமளவு நிரம்பியது. ஒவ்வொரு அரசியல் கட்சியும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெருமளவு நன்கொடையை பெற்று குவித்தன. இதில் பெருமளவு நிதி பெற்றது மத்தியில் ஆளும் பாஜகதான் என்கின்றன புள்ளி விவரங்கள்.
உச்சநீதிமன்றத்தில் வழக்குகள்: இந்த தேர்தல் பத்திரங்கள் என்பவை நிதி மசோதா சார்ந்தது; லோக்சபா ஒப்புதல் இல்லாமலேயே நிறைவேற்றப்பட்டது. இதன் அம்சங்கள், அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் 2109-ல் பொதுநலன் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. நிலுவையில் இருந்த இருந்த பொதுநலன் வழக்குகள் மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது. இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க இருக்கிறது.
இன்று விசாரணை: இந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெறும் நிலையில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது. அதில், தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தருகிறவர்கள் யார் என்கிற விவரத்தை அறியக் கூடிய உரிமை பொது மக்களுக்கு கிடையாது என மத்திய அரசு தெரிவித்தது. இன்றைய விசாரணையில் மத்திய அரசுக்கு எதிரான வாதங்க முன்வைக்கப்பட உள்ளன.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications