நகரங்கள், தேர்வு மையம் வாரியாக நீட் முடிவுகளை சனிக்கிழமைக்குள் வெளியிட வேண்டும் - உச்சநீதிமன்றம்
டெல்லி: நீட் தேர்வு முடிவுகளை மதிப்பெண் அடிப்படையில் நகரங்கள், தேர்வு மையங்கள் வாரியாக நாளை மறுநாள் (அதாவது ஜுலை 20, சனிக்கிழமை) மதியத்துக்குள் தேசியத் தேர்வு முகமை வெளியிட வேண்டும்; நீட் தேர்வு முடிவுகளை வெளியிடும் போது மாணவர்கள் குறித்த விவரங்கள் இடம் பெறக் கூடாது என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக தேர்வு மையம் வாரியாக முடிவுகளை வெளியிட மத்திய அரசு தெரிவித்த எதிர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்தனர். இந்த வழக்கின் விசாரணை ஜூலை 22-ந் தேதி திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் இன்று விசாரித்தது.
இன்றைய விசாரணையின் போது மத்திய அரசு தரப்பில், மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் ஜூலை 24-ந் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது பற்றி தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இன்றைய விசாரணையின் முடிவில் உச்சநீதிமன்றம், நீட் தேர்வு நடத்தப்பட்ட தேர்வு மையங்கள் வாரியாக நாளை மறுநாள் (ஜுலை 20) மதியத்துக்குள் முடிவுகளை மதிப்பெண் அடிப்படையில் வெளியிட வேண்டும். அப்படி முடிவுகளை வெளியிடும் போது மாணவர்களின் விவரங்கள் அதில் இடம் பெறக் கூடாது என உத்தரவிட்டது. இந்த வழக்கின் விசாரணை ஜூலை 22-ந் தேதி திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் ஜூலை 22-ந் தேதி பிற்பகலுக்குள் அனைத்து தரப்பு விசாரணைகளையும் நிறைவு செய்துவிடலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
முன்னதாக நீட் தேர்வு முறைகேடுகள் என்பவை சமூக சீர்கேடுகள் விவகாரம். இதனால்தான் நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் முக்கியத்துவம் தருகிறது. உச்சநீதிமன்றத்தின் வழக்கு விசாரணையை பல லட்சம் மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதனால் நீட் தேர்வு முறைகேடுகள் வழக்கு விசாரணையை இன்றே நடத்துகிறது உச்சநீதிமன்றம்.
நீட் வினாத்தாள் கசிவு, விற்பனை என்பது ஒட்டுமொத்தமாக மாணவர்களை எந்தெந்த வகைகளில் பாதித்துள்ளது என்பதை மனுதாரர்கள் விரிவாக விவரிக்க வேண்டும். நீட் தேர்வு முறைகேடுகளால் ஒட்டுமொத்த மாணவர்களுக்கும் பாதிப்பு என உறுதியாக தெரிந்தால்தான் மறு தேர்வு நடத்த உத்தரவிடப்பட முடியும். இல்லை எனில் நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது எனவும் இன்றைய விசாரணையில் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications