அமைச்சர் செந்தில் பாலாஜியின் 'அரவக்குறிச்சி’ வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு ரத்து- உச்சநீதிமன்றம்
டெல்லி: தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தேர்தல் வெற்றிக்கு எதிராக கீதா என்பவர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது.
2016-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபை பொதுத்தேர்தலின் போது பணப்பட்டுவாடா காரணமாக அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதன்பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார்.

செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிராக அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தி கழகத்தின் கீதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன் கீதாவுக்கு அபராதமும் விதித்தது. முதலில் ரூ30,000 அபராதம் விதிக்கப்பட்டு பின்னர் இது ரூ10,000 ஆகக் குறைக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கீதா மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இம்மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications