Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனைவி வீட்டு வேலை செய்யாதது எல்லாம் ஒரு பிரச்சனையா? விவாகரத்து வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மனைவி வீட்டு வேலை செய்ய மறுத்து தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் இதனால் தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் எனச் சொல்லி இளைஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீங்கள் வீட்டு வேலைகளைச் செய்ய மட்டும் பெண்ணை திருமணம் செய்யவில்லை எனக் காட்டமான கருத்துகளைத் தெரிவித்துள்ளது.

திருமணம் செய்த ஜோடிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது தாராளமாகப் பிரிந்து சென்றுவிடலாம். ஆனால், இந்த காலத்தில் சிறு சிறு விஷயங்களுக்குக் கூட விவாகரத்து கோருவது அதிகரித்து வருகிறது. ஒரு பிரச்சினை என வரும்போது பேசி சரி செய்வோம் என்ற மனப்பான்மை இல்லாமல்.. பிரிந்து செல்வதே ஒரு தீர்வு என இளம் தம்பதிகள் நினைக்கிறார்கள்.

Supreme Court divorce case Wife Skipping Chores Not Cruelty Marriage Means Not Maid Service

விவாகரத்து

இதன் காரணமாகவே சின்ன சின்ன விஷயங்களுக்கும் கூட விவகாரத்து கேட்கும் போக்கு அதிகரித்துள்ளன. பல்வேறு கவுன்சிலர்கள் கூட சிறு பிரச்சனைகளுக்கும் பேசி தீர்க்க இளம் தம்பதிகள் ரெடியாக இல்லாததே பிரச்சனைக்குக் காரணம் எனச் சொல்கிறார்கள். அப்படியொரு விவாகரத்து தொடர்பான மேல்முறையீட்டு மனுவில் தான் உச்ச நீதிமன்றம் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

வழக்கு விசாரணையின்போது, சமையல் போன்ற வீட்டு வேலைகளைச் செய்யாதது கொடுமையாகாது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்தீப் மேத்தா மேலும், "நீங்கள் வீட்டு வேலைகளைச் செய்ய மட்டும் பெண்ணை திருமணம் செய்யவில்லை. வாழ்க்கைத் துணையாக மணக்கிறீர்கள்" எனக் குறிப்பிட்டார்.

காலம் மாறிவிட்டது

நீதிபதிகள் மேலும், "காலம் மாறிவிட்டது.. வீட்டு வேலைகளில் கணவனும் பங்களிக்க வேண்டும். சமையல் செய்வது, துணி துவைப்பது போன்ற வேலைகளில் நீங்களும் உதவ வேண்டும். இன்றைய சூழல் வேறு" என்று கூறினார். இந்த வழக்கில் சமரச முயற்சி தோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்தே மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்த சூழலில், நீதிபதிகள் இந்த கருத்துகளைத் தெரிவித்தனர்.

பின்னணி

இந்த தம்பதிக்கு 2017ல் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு எட்டு வயதில் மகன் உள்ளான். திருமணம் நடந்த ஒரு வாரத்திலேயே, மனைவி தன்னை தவறாக நடத்தத் தொடங்கியதாக அவர் குற்றம்சாட்டினார். மனைவி தன்னை மற்றும் பெற்றோரைத் தகாத வார்த்தைகளில் திட்டியதாகவும், சமைக்க மறுத்ததாகவும் கணவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும், குழந்தை பிறந்தபோது நடைபெற்ற தொட்டில் சடங்கு விழாவுக்குக் கூட தன்னை அழைக்கவில்லை என்றும் அவர் புகார் கூறியிருந்தார்.

இருப்பினும் மனைவி தரப்பில் வேறு விதமாகப் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. குழந்தை பிறப்புக்காக அவர் கணவரின் சம்மதத்துடன் பெற்றோர் வீட்டிற்குச் சென்றதாகக் கூறப்பட்டது. கணவர் குடும்பத்தினர் தான் தொட்டில் சடங்குக்கு வரவில்லை என்றும் தன்னிடம் பணம் மற்றும் தங்கம் கேட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

வழக்கு

இது தொடர்பாகக் கணவர் தரப்பே முதலில் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளது. அதில் குடும்ப நல நீதிமன்றம் கணவரின் மனுவை ஏற்று விவாகரத்து வழங்கியது. இருப்பினும், அதை எதிர்த்து பெண் தரப்பில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது. இதனால் அதிருப்தியடைந்த கணவர் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதுதான் நீதிபதிகள் இந்த கருத்துகளைத் தெரிவித்தனர். மேலும், அடுத்த விசாரணையில் இரு தரப்பினரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+