டெல்லி ஜகாங்கிர்புரி வன்முறை: ஆக்கிரமிப்புகளை அகற்றிய புல்டோசர்கள் - உச்சநீதிமன்றம் திடீர் உத்தரவு
டெல்லி: ஜகாங்கிர்புரி வன்முறையை தொடர்ந்து அங்கு ஆக்கிரமிப்பு நிலங்களில் கட்டப்பட்டு இருக்கும் வீடுகளை அகற்ற உச்சநீதிமன்றம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.
டெல்லியில் அனுமன் ஜெயந்தியின் போது இந்துக்கள் - இஸ்லாமியர்கள் இடையே மோசமான கலவரம் ஏற்பட்டது. அங்கே சிலையை கொண்டு சென்ற போது கலவரம் ஏற்பட்டது. இதில் இரண்டு விதமான கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.மசூதி மீது இந்துக்கள் கற்களை வீசி, காவி கொடி நட முயன்றதாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் இஸ்லாமியர்கள்தான் மசூதியில் இருந்து முதலில் கற்களை வீசினார்கள் என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக அங்கு இரண்டு பிரிவினருக்கு இடையில் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு கலவரத்தில் முடிய, இரண்டு தரப்பினரும் மாறி மாறி கற்களால் தாக்கிக்கொண்டனர். மோதலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தனர். பல போலீசார் இந்த தாக்குதலில் காயம் அடைந்தனர்.

கடைகள் உடைப்பு பதற்றம்
அங்கு இருந்த கடைகள் பல இந்த தாக்குதலில் அடித்து உடைக்கப்பட்டன. இதனால் அந்த பகுதியில் கடந்த 4 நாட்களாக மிகவும் பதற்றம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அத்துடன் சம்பவ இடத்தில் பதற்றத்தை தணிக்க போலீசார் கொடி அணிவகுப்பு, ரோந்து என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். டிரோன் கேமரா மூலமும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

குற்றவாளிகள் கைது
கலவரத்தின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான அன்சார், உள்பட 22 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் 2 பேர் சிறுவர்கள் ஆவர். இந்த நிலையில், அன்சார் உள்பட கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் 5 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

ஆக்கிரமிப்பு அகற்றம்
இதனிடையே ஜகாங்கிர்புரி பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க மாநகராட்சி உத்தரவிட்டதை அடுத்து 9 புல்டோசர்கள் மூலம் வீடுகள், கடைகளை அகற்றப்பட்டன. இதனால் மேலும் பதற்றம் உருவானது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

உச்சநீதிமன்றம் தடை
இந்த நிலையில் ஜகாங்கிர்புரி பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க உச்சநீதிமன்றம் தற்காலிகமாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டு வழக்கு விசாரணையை நாளைய தினத்திற்கு தள்ளி வைத்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications