மேற்கு வங்க வன்முறை.. "நான் விசாரிக்க மாட்டேன்.." விலகிக் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி
டெல்லி: பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் மேற்கு வங்க கலவரம் தொடர்பான வழக்கை விசாரிப்பதில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி விலகிக் கொள்வதாக அறிவித்தார்.
மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிறகு வன்முறைகள் நடைபெறுவதாகவும், திரிணாமுல் தொண்டர்களால், பாஜக தொம்டர்கள் கொலை செய்யப்படுவதாகவும் பாஜகவினர் குற்றம்சாட்டுகிறார்கள்.
இந்த நிலையில், பலியானவர்களின் குடும்பங்கள் சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்திற்கு சென்றிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி இந்திரா பானர்ஜி முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது. ஆனால், "நான் வழக்கை விசாரிக்க விரும்பவில்லை," என்று கூறி, நீதிபதி இந்திரா பானர்ஜி வழக்கில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டுள்ளார். நீதிபதி இந்திரா பானர்ஜி கொல்கத்தாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்கக்தாகும்.
தேர்தல்களுக்குப் பிறகு நடக்கும் ஒவ்வொரு வன்முறைச் செயலையும் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை என்று அழைக்க முடியாது என்று மேற்கு வங்க அரசு தனது பதிலில் கூறியிருந்தது.
இரண்டு பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி அரசு உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், வழக்கிலிருந்து இந்திரா பானர்ஜி விலகியுள்ளதால், வழக்கு இப்போது மற்றொரு பெஞ்சிற்கு அனுப்பப்படும்.












Click it and Unblock the Notifications