அதானி வழக்கு! சிறப்பு குழு தேவையில்லை! 3 மாதத்தில் விசாரணையை முடிக்க செபிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: அதானி குழுமம் மீதான முறைகேடு வழக்கை செபியே விசாரிக்கலாம் என்றும் 3 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனம் ஹுண்டன்பர்க். இது கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அதானி குழுமம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டிருந்தது. சுமார் 413 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் அதானி குழுமம் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தியாவில் செயல்படும் அதானி குழுமத்தை சேர்ந்த 7 நிறுவனங்கள் தங்களது நிதி நிலையை உண்மைக்கு புறம்பான வகையில் காட்டுவதாகவும் பங்கு சந்தையை ஏமாற்றி லாபம் சம்பாதிப்பதாகவும் அந்த அறிக்கையிலவ் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. மேலும் வெளிநாடுகளில் போலியான நிறுவனங்களை உருவாக்கி அங்கு சட்டவிரோத பணப்பரிவர்த்தனையையும் அதானி நிறுவனம் செய்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையால் அதானி குழுமத்தின் பங்குகள் ஒரே நாளில் சரிவை சந்தித்தன. அதாவது ரூ 49 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகள் கேள்விக்குறியாகின. இதனால் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எம்.சாப்ரே தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது.
ஹுண்டன்பர்க் ஆய்வறிக்கையின் படி அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டதாக என்பதை விசாரிக்கும் பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்புக்கு (செபி) உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் விசாரணையை முடிக்காமல் தாமதப்படுத்துவதாக செபி மீது ஓய்வு பெற்ற சாப்ரே குற்றச்சாட்டை எழுப்பினார்.
உச்சநீதிமன்றம் அளித்த காலக்கெடுவுக்குள் செபி விசாரணையை நடத்தவில்லை என்பது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மனுதாரர்கள் தொடர்ந்தனர். மேலும் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து அதானி வழக்கை விசாரிக்கவும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் அதானி குழுமத்திற்கு எதிராக மோசடி குற்றச்சாட்டுகள் குறித்த வழக்கில் இன்றைய தினம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதுகுறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில் அதானி வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கத் தேவையில்லை. அதானி வழக்கை செபியே விசாரணை நடத்தலாம். 3 மாதங்களில் செபி விசாரணையை முடிக்க வேண்டும். ஹுண்டன்பர்க் அறிக்கையோ அல்லது மற்ற அறிக்கைகளை வைத்துக் கொண்டு சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உத்தரவிட முடியாது. செபி நடத்தும் விசாரணையை சந்தேகிக்கும் படி ஆதாரங்கள் ஏதும் இல்லை. பங்கு சந்தை தொடர்பான ஒழுங்காற்று ஆணையத்தின் அதிகார வரம்புகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஒரு வேளை அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டிருந்தால் மத்திய அரசும் செபியும் நடவடிக்கை எடுக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications