ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தவருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்- ஆக.4-க்கு ஒத்திவைப்பு!
டெல்லி: அவதூறு வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி பிஆர் கவாய் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. ராகுல் காந்தி மீது வழக்கு தொடர்ந்த பாஜக எம்.எல்.ஏ புர்னேஷ் மோடி மற்றும் குஜராத் அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
2019-ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலாரில் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, நாட்டை விட்டு தப்பி ஓடுகிற மோசடி பேர்வழிகள் மோடி என்ற பெயர் கொண்டவர்களாகவே இருக்கின்றனர் என்றார். இது மோடி சமூகத்தை இழிவுபடுத்துவதாக கூறி குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

2 ஆண்டு சிறை தண்டனை: இந்த வழக்கை விசாரித்த குஜராத்தின் சூரத் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. மேலும் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்வதற்காக 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது சூரத் நீதிமன்றம்.
எம்பி பதவி தகுதி நீக்கம்: 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால் ராகுல் காந்தி எம்பி பதவி உடனடியாக பறிக்கப்பட்டது. மேலும் ராகுல் காந்தி வெற்றி பெற்ற கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டது. டெல்லியில் ராகுல் காந்திக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவும் திரும்பப் பெறப்பட்டது.
அப்பீல் தள்ளுபடி: பின்னர் ஏப்ரல் 3-ந் தேதி சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை கோரி ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார். ராகுல் காந்தியின் இந்த மேல்முறையீட்டு மனுவை சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது.
உயர்நீதிமன்றத்தில்: பின்னர் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மற்றொரு மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தார். அப்போது நடந்த விசாரணையில், ராகுல் காந்தி வென்ற வயநாடு தொகுதிக்கு 3 மாதங்களில் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவிக்கக் கூடும். அதை ராகுல் காந்தியால் தடுத்து நிறுத்த முடியாது என்பதால் 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. ஆனால் குஜராத் உயர்நீதிமன்றம், ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுவை டிஸ்மிஸ் செய்தது. அத்துடன் கீழ் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது சரிதான் எனவும் உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றத்தில் அப்பீல்: ராகுல் காந்தி இறுதி வாய்ப்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ராகுல் காந்தி மேல்முறையீடு செய்வதற்கு முன்னதாகவே அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பாஜக எம்.எல்.ஏ புருனேஷ் மோடி, உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
உச்சநீதிமன்ற அப்பீல் மனு விவரம்: உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில், ராகுல் காந்தி அரசியல் ரீதியாக பேசியதை மனுதாரர் தவறுதலாக புரிந்து கொண்டு தங்களைப் பேசியதாக வழக்கு தொடர்ந்தது அடிப்படையிலேயே தவறானது. ராகுல் காந்தி எந்த ஒரு சமூகத்துக்கு எதிராகவும் பேசவில்லை. அவரது பேச்சு முழுமையாக அரசியல் அடிப்படையிலானது. ஒரு மக்கள் பிரதிநிதிக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் தம்மை தேர்ந்தெடுத்த மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மோடி என்பது ஒரு சமூகத்தின் பெயர் மட்டுமல்ல.. பல்வேறு சமூகங்கள், சமூகங்களின் உட்பிரிவுகளிலும் கூட இருக்கிறது. மோடி என்ற பெயரை தனிப்பட்ட நலன்களுக்காக ராகுல் காந்தி விமர்சிக்கவும் இல்லை. மனுதாரர் மோத் வணிக சமாஜ் என்ற அமைப்பைச் சேர்ந்தவராக குறிப்பிட்டுள்ளார். அவருக்கும் மோடி பெயருக்கும் என்ன தொடர்பு? அத்துடன் 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்காவிட்டால் ராகுல் காந்தியின் 8 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை பாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நீதிபதி பிஆர் கவாய் பெஞ்ச்: இதனிடையே ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் பிஆர் கவாய், பிகே மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் நேற்று அறிவித்தது.
இன்று விசாரணை: இதனைத் தொடர்ந்து நீதிபதி பிஆர் கவாய் பெஞ்ச் இன்று ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்தது. இன்றைய விசாரணையில் ராகுல் காந்தி மீது வழக்கு தொடர்ந்த குஜராத் மாநில பாஜக எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி மற்றும் குஜராத் மாநில அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் மாதம் 4-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றம்.. புதிய தலைவர் மாணிக்கம் தாகூர்? ராகுல் காந்தி கிரீன் சிக்னல்? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications