Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை இல்லை.. உச்ச நீதிமன்றம் அதிரடி.. மத்திய அரசுக்கும் நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மருத்துவ படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வுக்கான முடிவுகளை வெளியிட தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வினாத்தாள் கசிந்ததாக தொடரப்பட்ட பொதுநல மனு மீதான விசாரணையை ஜூலைக்கு எடுத்துக்கொள்வதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்காக நீட் எனும் நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாநிலங்களின் பாடத்திட்டங்களின் கீழ் படித்த, படிக்கும் மாணவர்கள் மருத்துவ படிப்பை எதிர்கொள்வதற்கு பெரும் போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. மருத்துவ படிப்பு எனும் கனவையே தொலைக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது.

Supreme Court Refused to grant stay on the results of NEET-UG 2024 exam

இதனால் நீட் நுழைவுத் தேர்வை தமிழ்நாடு மிகக் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கிறது. கடும் எதிர்ப்புகளுக்கும் இடையே நீட் நுழைவுத்தேர்வு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வில் மாணவர்கள் முறைகேடுகள் ஈடுபடுவதை தடுக்க கடுமையான கெடுபிடிகள் காட்டப்படுகின்றன. எனினும், வடமாநிலங்களில் நீட் தேர்வின் போது ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பிரச்சினைகள் எழுகின்றன.

மும்பையில் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த ராஜஸ்தானைச் சேர்ந்த 20 வயது மாணவர் பிடிபட்டார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல், தேர்வில் முறைகேடு செய்ததாக பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில், 14 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

அதேபோல் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தாகவும் தகவல் கசிந்தது. ஆனால் இதனை தேசிய தேர்வு முகமை திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில், முறைகேடு புகார்கள் எழுந்துள்ளதால் நீட் தேர்வை புதிதாக நடத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டது.

அதே வேளையில், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை எதுவும் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொதுநல மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்த தலைமை நீதிபதி, கோடை விடுமுறைக்கு பிறகு அதாவது ஜூலை மாதத்தில் மனு மீதான விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தார்.

2024 -2025 ஆம் கல்வியாண்டு மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான 'நீட்' நுழைவுத்தேர்வு கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 557 நகரங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் இந்த தேர்வு நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவாக இந்த ஆண்டு 23 லட்சம் மாணவ மாணவியர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். நீட் தெர்வு முடிவுகள் வரும் ஜூன் 14 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+