ஆவணமில்லாமல் ரூ2,000 நோட்டு மாற்றம்- அவரச வழக்காக உச்சநீதிமன்றம் மறுப்பு!
டெல்லி: ஆவணங்கள் இல்லாமல் வங்கிகளில் ரூ2,000 நோட்டு மாற்ற அனுமதிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் அவசரமாக விசாரிக்க மறுத்துவிட்டது.
ரூ. 2,000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்தது. இந்த நோட்டுகளை மாற்றுவதற்கு எந்த ஒரு ஆவணமும் தேவை இல்லை என்பதும் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு. இதற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஸ்வினிகுமார் உபாத்யாய வழக்கு தொடர்ந்தார்.
ஆனால் ரூ.2,000 நோட்டு விவகாரம் என்பது அரசின் கொள்கை முடிவு. இதில் ஆய்வு செய்யக் கூடிய மேல்முறையீட்டு ஆணையம் அல்ல நீதிமன்றம் என கூறி அஸ்வினிகுமார் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது.

இதனைத் தொடர்ந்து அஸ்வினி குமார் உபாத்யாய, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். அம்மனு, நீதிபதிகள் சுதான்ஷூ துலியா, விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. இதனை அவசர வழக்காக விசாரிக்கவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுத்திருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் உச்சநீதிமன்றத்தின் அனிருதா போஸ், ராஜேஷ் பிண்டல் பெஞ்ச் முன்பாக மீண்டும் அஸ்வினி உபாத்யாய ஆஜராகி தமது மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரினார். அப்போது அதிருப்தி அடைந்த நீதிபதிகள், ஏற்கனவே ஒரு பெஞ்ச்சில் தாக்கல் செய்த மனுவை மீண்டும் ஏன் இப்போது கொண்டு வருகிறீர்கள் என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அஸ்வினி குமார் உபாத்யாய, ரூ. 2,000 நோட்டுகளை மாவோயிஸ்டுகள், பயங்கரவாதிகள் தடையின்றி மாற்றி வருகின்றனர். இதுவரை ரூ. 80,000 கோடி அளவுக்கு ரூ. 2,000 நோட்டுகள் மாற்றப்பட்டுவிட்டன. ஆகையால்தான் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றார். ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
இந்த நிலையில் இன்று மீண்டும் தமது மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் வலியுறுத்தினார். இதனை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications