உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் விசாரணைகள் நேரடி ஒளிபரப்பு தொடக்கம்- சரித்திரத்தில் முதல் முறை!
டெல்லி: இந்திய சரித்திரத்தின் வரலாற்றில் முதல் முறையாக உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் நடத்துகிற முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் விசாரணைகள் இன்று முதல் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
உச்சநீதிமன்ற விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யலாம் என 2018-ம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு முன்னர் இதே செப்டம்பர் 27-ந் தேதி, நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் இதற்கு அனுமதி கொடுத்தது. உச்சநீதிமன்ற விசாரணைகளை லைவ்வாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் என்.வி.ரமணா, அண்மையில் பணி ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்ற நாளில் நடத்திய வழக்கு விசாரணைகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து இன்று முதல் அரசியல் சாசன் பெஞ்ச் முன்பான நடைபெறும் விசாரணைகள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. உச்சநீதிமன்ற இணையதளத்தில் இந்த நேரலையை பார்க்க முடியும்.

உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் முன்பாக சிவசேனா தொடர்பான வழக்கு, முற்படுத்தப்பட்ட வகுப்பினரில் ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு உள்ளிட்டவை விசாரிக்கப்படுகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யுயு லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் பெஞ்ச் இந்த வழக்கு விசாரணைகளை நடைபெறுகிறது. முதலில் 10% இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற்றது.
உச்சநீதிமன்ற விசாரணைகள் லைவ் ஒளிபரப்பு: https://webcast.gov.in/scindia/live1/
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications