டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதலில் 'மோடி' படத்தை பாருங்க.. அப்புறம் முடிவெடுங்க.. எலெக்சன் கமிஷனுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Google Oneindia Tamil News

டெல்லி: 'மோடி சுயசரிதை' படத்தை வெளியிட அனுமதிக்கலாமா, வேண்டாமா என்பதை. அந்த படத்தை பார்த்துவிட்டு முடிவு செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் சுயசரிதை வாழ்க்கை திரைப்படம் 'பிஎம் மோடி' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விவேக் ஒப்ராய் பிரதமர் மோடி வேடத்தில் நடித்துள்ளார். ஒமங் குமார் இயக்கி உள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி இருந்தது.

Supreme court tells Election commission, first Watch Modi biopic and then decide

இந்நிலையில் 'பிஎம் மோடி' படத்தை தேர்தல் சமயத்தில் வெளியிட அனுமதிக்கக் கூடாது என காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. இதைஏற்று பிஎம் மோடி படத்தை வெளியிட கடந்த ஏப்ரல் 10ம் தேதி தடை விதித்தது.

இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது படக்குழு. இந்த வழக்கை இன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது நீதிபதிகள், முதலில் பிஎம் மோடி திரைப்படத்தை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பார்க்க வேண்டும் என்றும், அதன் பிறகு படத்தை வெளியடலாமா, வேண்டாமா என்பதை செய்யுமாறும் அறிவுறுத்தியதோடு, வழக்கையும் ஒத்திவைத்தனர்.

பிஎம் மோடி படத்தை தேர்தல் சமயத்தில் வெளியிட அனுமதிக்கக் கூடாது என காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. இதை ஏற்று பிஎம் மோடி படத்தை வெளியிட தடை விதித்தது. இதற்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் முதலில் 'பிஎம் மோடி' படத்தை பார்த்துவிட்டு தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

English summary
Supreme court tells Election commission, first Watch PM Modi biopic and then decide; case adjourned to be taken up on a later date.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X