மனைவியுடன் கட்டாய உறவில் ஈடுபடும் கணவனுக்கு இனி சிக்கல்? உச்ச நீதிமன்றம் மேஜர் முடிவு
டெல்லி: 18 வயதை தாண்டிய மனைவியை கட்டாயப்படுத்தி கணவன் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதை கற்பழிப்பாக கருத முடியாது என்று இந்திய தண்டனை சட்டத்தின் 375-வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் மனைவியின் விருப்பமின்றி வலுக்கட்டாயமாக தாம்பத்திய உறவில் ஈடுபடும் கணவனுக்கு அளிக்கப்பட்டுள்ள சட்ட பாதுகாப்பு செல்லுமா என்பதை முடிவு செய்யப்போவதாக உச்ச நீதிமன்றம் தற்போது அறிவித்துள்ளது.
18 வயதை தாண்டிய மனைவியை கட்டாயப்படுத்தி கணவன் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதை கற்பழிப்பாக கருத முடியாது என்பது இந்திய தண்டனை சட்டத்தில் இருக்கிறது. மத்திய அரசு புதிதாக இயற்றிய பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 375-லும், 18 வயதை தாண்டிய மனைவியுடன் வலுக்கட்டாயமாக தாம்பத்திய உறவில் ஈடுபடும் கணவன் மீது வழக்கு தொடர முடியாது என்று கூறப்பட்டுள்ளது. கட்டாய உறவை குற்றமாக அறிவிக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் முரண்பட்ட தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டது.

இதன் காரணமாக மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனுக்களை விசாரித்து வருகிறது. அண்மையில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தது. அதில், திருமண உறவில் பாலியல் வன்கொடுமையைக் குற்றமாக்குவது திருமண உறவுகளை பாதிக்கும் என்றும், சமூகத்தில் கடுமையான குழப்பத்திற்கும் இடையூறுக்கும் வழிவகுக்கும் என்றும் கணவனுக்கான சட்ட பாதுகாப்பு நீடிக்க வேண்டும் என்றும் இதை குற்றமாக்குவது சரியல்ல என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு , உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன்ஹப நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மகாராஷ்டிரா அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுமாறு வலியுறுத்தினார். அதற்கு பதில் அளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, அதை இறுதியில் பார்ப்போம் என்றார்.
இதனிடைய மனுதாரர் தரப்பில் அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கருணா நந்தி வாதிடுகையில், பாலியல் செயலில் பெண்ணின் சம்மதம் மிகவும் முக்கியம் என்று வாதிட்டார். அப்போது குறிக்கிட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், , ஒருவர் தன் மனைவியிடம் பாலியல் பலாத்கார குற்றத்தில் ஈடுபட்டதாக நீதித் துறை அறிவித்தால் அது புதிய குற்றமாக உருவாக்குமா என்று கேள்வி எழுப்பினார். பாலியல் வன்கொடுமை என்பதற்கான வரையறையை எவ்வாறு நிர்ணயிப்பது என்றும் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்து வாதிட்ட கருணா நண்டி, "பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 375-ல் உள்ள விதிவிலக்கு 2, பெண்ணின் உரிமையை பறிப்பதாக உள்ளது. பாலியல் பலாத்காரத்தால் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் பாதிப்பு என்பது கணவனால் ஏற்பட்டது என்றாலும், வேறு நபராக இருந்தாலும் ஒன்றுதான். ஒரு பெண் லிவ்-இன் உறவில் இருந்தால், சம்மதமின்றி பாலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமையாகக் கருதப்படுகிறது. ஆனால், ஒரு திருமணமான பெண் மீண்டும் மீண்டும் மிகக் கொடூரமான செயலுக்கு கணவனால் உள்ளானால் அது பாலியல் வன்கொடுமை அல்ல என்று சட்ட தெரிவிக்கிறது.
திருமண உறவில் இருக்கும் பாலியல் வன்கொடுமை விதிவிலக்கு, பாலின சமத்துவத்தை மீறுவதாக அமைந்துள்ளது. பாலியல் வன்கொடுமையை பிஎன்எஸ் குற்றமாகக் குறிப்பிடுகிறது. ஆனால், கணவன் என்ற அந்தஸ்தின் அடிப்படையில் அதே குற்றத்தில் ஈடுபட்டால் அவரை முழுவதுமாக குற்றத்தில் இருந்து விலக்கி வைக்கிறது. எனவே, இதனை அரசியலமைப்புக்கு ஏற்ப நாம் கொண்டு வர வேண்டும்.
இங்கிலாந்து நாட்டில் 1736ல் தலைமை நீதிபதியாக இருந்த மேத்யூ ஹேலி என்பவர் அளித்த தீர்ப்புதான் இன்றைக்கும் திருணமான பெண்களுக்கான பாலியல் குற்றங்கள் விவகாரத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. அவர் தனது தீர்ப்பில், கணவன் - மனைவியை ஓர் உடல் என அவர் கருதினார். கணவன் பாலியல் வன்கொடுமை குற்றவாளியாக இருக்க முடியாது என்றும் அவர் அளித்த தீர்ப்பில் கூறினார். பரஸ்பர திருமண சம்மதம் மற்றும் ஒப்பந்தத்தின் மூலம் மனைவி, கணவனுக்கு உரிமையை கொடுத்துள்ளார் என தீர்ப்பில் கூறினார். ஆனால் இப்படி தீர்ப்பு வந்த இங்கிலாந்திலேயே மனைவியை கணவன் பாலியல் வன்கொடுமை செய்வதை 2003-ல் குற்றமாக மாற்றப்பட்டுவிட்டது" என குறிப்பிட்டார்.
இதையடுத்து மனைவியுடனான கட்டாய பாலியல் உறவை, பாலியல் பலாத்காரம் என்ற பெயரில் குற்றமாகக் கருதுவது திருமண உறவை பாதிக்கும் என மத்திய அரசு கூறி இருப்பதற்கு பதில் வாதத்தை முன்வைக்குமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறினார். இதையடுத்து வாதிட்ட மனுதாரர் வழக்கறிஞர் கருணா நண்டி, திருமணமான பெண்ணை பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாப்பது திருமணம் எனும் நிறுவனத்தை அழிக்காது என்றும், திருமணம் தனிப்பட்டது; நிறுவன ரீதியானது அல்ல என்றும் கூறினார்
மனுதாரரின் வாதகளுக்கு பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், சட்ட பாதுகாப்பு அளிப்பதை ரத்து செய்துவிட்டால், அதன்பிறகு, கட்டாய உறவில் ஈடுபடும் கணவர்களை பலாத்கார சட்டப்பிரிவின்கீழ் விசாரிக்க வேண்டுமா? அல்லது இதற்கென தனியான குற்றத்தை கோர்ட்டு உருவாக்க வேண்டுமா என்பது குழப்பமாக உள்ளது.
கணவனுக்கான சட்ட பாதுகாப்பு, அரசியல் சாசனம் அளிக்கும் சமத்துவ உரிமை, வாழ்வுரிமை, தனியுரிமை ஆகியவற்றை மீறுவதாக நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், இந்த சட்டப்பிரிவை நிறைவேற்றியபோது, 18 வயதை தாண்டிய மனைவியுடன் கணவன் கட்டாய உறவில் ஈடுபடுவது பலாத்காரம் அல்ல என்பதுதான் நாடாளுமன்றத்தின் கருத்தாக உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் இது, அரசியல் சாசனம் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஆகும். எங்கள் முன்பு 2 தீர்ப்புகள் இருக்கின்றன. கணவனுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்கும் சட்டப்பிரிவு செல்லுமா என்பதுதான் மைய பிரச்சினை. அதுபற்றி முடிவு செய்வோம் என நீதிபதிகள் கூறினர். மேலும் மத்திய அரசின் பதில் மனுவுக்கு பதில் அளிக்குமாறு மனுதாரர்களை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications