அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலம் செப். 15 வரை நீட்டிப்பு.. உச்ச நீதிமன்றம்
டெல்லி: அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ரா (எஸ்கே மிஸ்ரா) பதவி நீட்டிப்பு சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும் அவருக்கு கூடுதல் பதவி நீட்டிப்பு கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.
டெல்லி: அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ரா (எஸ்கே மிஸ்ரா) பதவி நீட்டிப்பு சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும் அவருக்கு கூடுதல் பதவி நீட்டிப்பு கோரி மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு செப்டம்பர் 15 ஆம் தேதி வரை பதவிக்காலத்தை நீட்டித்து உத்தரவிட்டது.

அமலாக்கத்துறையின் தற்போதைய இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு மத்திய அரசு ஏற்கனவே 3 முறை பணி நீட்டிப்பு வழங்கியது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3-வது பணி நீட்டிப்பை மத்திய அரசு வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸின் ரந்தீப்சிங் சுர்ஜிவாலா, ஜெயா தாக்கூர், திரிணாமுல் காங்கிரஸின் மஹூவா மொய்த்ரா உள்ளிட்டோர் வழக்குகள் தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் மிஸ்ராவுக்கு மத்திய அரசு பதவி நீட்டிப்பு கொடுத்தது சட்டவிரோதம். 2021-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. அத்துடன் ஜூலை 31-ந் தேதி வரை மட்டுமே சஞ்சய் மிஸ்ரா, அமலாக்கத்துறை இயக்குநராக பதவியில் இருக்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டது.
இந்நிலையில்தான் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை நேற்று தாக்கல் செய்தது. அதில், சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு அக்டோபர் மாதம் வரை பதவி நீட்டிப்பு வழங்க கோரியுள்ளது மத்திய அரசு. இம்மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை எஸ்.கே மிஸ்ராவின் பதவி காலத்தை நீட்டித்துக்கொள்ளலாம் என உத்தரவிட்டது. செப்டம்பர் 15 ஆம் தேதி நள்ளிரவு பதவிக் காலம் நிறைவு அடைந்ததாக கருதப்படும். அதன்பிறகு எக்காரணத்தை கொண்டும் நீட்டிக்கப்படாது" என்றும் தெரிவித்தது.












Click it and Unblock the Notifications