ஹைகோர்ட்டுக்கு போகாம ஏன் இங்க வந்தீங்க? ஹேமந்த் சோரன் வழக்கில் சுப்ரீம்கோர்ட் சரமாரி கேள்வி
டெல்லி: சுரங்க முறைகேடு வழக்கில் தாம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதற்கு எதிராக ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் முறையிடாமல் உச்சநீதிமன்றத்துக்கு நேராக வந்தது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தை நாடவும் ஹேமந்த் சோரனுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியது.
ஜார்க்கண்ட் மாநிலத்தை அமலாக்கத்துறையானது சுரங்க முறைகேடு ஊழல் வழக்கை முன்வைத்து அதகளப்படுத்தி வருகிறது. முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு மொத்தம் 10 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அண்மையில்தான் ஒரே ஒருமுறை அமலாக்கத்துறை விசாரணைக்காக ஹேமந்த் சோரன் ஆஜரானார்.

பின்னர் டெல்லி சென்ற ஹேமந்த் சோரனை விசாரிக்க அமலாக்கத்துறை முயற்சித்தது. ஆனால் டெல்லி பங்களாவில் ஹேமந்த் சோரன் இல்லை என தெரியவந்தது. ஹேமந்த் சோரனுக்காக பல மணிநேரம் காத்திருந்தும் அவரை தொடர்பு கொள்ள முடியாமல் தத்தளித்தது அமலாக்கத்துறை. இதனால் ஹேமந்த் சோரன் 30 மணிநேரமாக மாயமாகிவிட்டார் என தகவலும் பரவியது. ஆனால் ஹேமந்த் சோரன் ராஞ்சிக்கு காரிலேயே வந்துவிட்டார். இதனையடுத்து நேற்று முன்தினம் மீண்டும் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
ராஞ்சியில் ஹேமந்த் சோரன் இல்லத்தில் சுமார் 7 மணிநேரம் இந்த விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை முடிவில் ஹேமந்த் சோரன், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனால் ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனிடையே ஹேமந்த் சோரனை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ராஞ்சி எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத் தாக்கல் செய்தது. இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், ஹேமந்த் சோரனை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது.
மேலும் ஹேமந்த் சோரன் தமது கைதுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது. இன்றைய விசாரணையின் போது, ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தை நாடாமல் ஏன் உச்சநீதிமன்றத்துக்கு வர வேண்டும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அத்துடன் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தை ஹேமந்த் சோரன் தரப்பு அணுக வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications