Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமைச்சர்கள் சூமோட்டா வழக்கு நீதிபதி யார்? தலைமை நீதிபதி முடிவெடுக்க உச்சநீதிமன்றம் புது உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை தாமாக முன்வந்து விசாரிக்கும் நீதிபதி யார் என்பதை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியே முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு எதிரான அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, வளர்மதி உள்ளிட்டோர் பல்வேறு வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் விடுதலை செய்த வழக்குகளின் தீர்ப்பை மறு ஆய்வு செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறார். இந்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று முதல் இறுதி விசாரணை நடைபெற உள்ளது.

Supreme Court to hear Minister KKSSR Ramachandran appeal plea against suo motu revision

உச்சநீதிமன்றம் நோட்டீஸ்: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து (சூமோட்டோ) விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இத்தகைய மறு ஆய்வு வழக்குகளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் அனுமதி நீதிபதி ஆனந்த் வெங்கடெஷ் பெற்றுள்ளாரா? இல்லையா? என பதில் மனுத் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

பரபரப்பான பதில் மனு: இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் அனுமதியை பெறுவதற்கு முன்னதாகவே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கு விசாரணையை தொடங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் தாக்கல் செய்த பதில் மனு: உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் ஹெச் ராய், பி.கே.மிஸ்ரா பெஞ்ச் முன்பாக சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் தரப்பு தாக்கல் செய்த பதில் மனுவில், முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க முன் அனுமதி கோரி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21-ந் தேதி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பினார். இக்கடிதத்தை ஆகஸ்ட் 23-ந் தேதி பதிவாளர் அலுவலகம், தலைமை நீதிபதிக்கு அனுப்பியது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ந் தேதி தலைமை நீதிபதி இக்கடிதத்தைப் பார்த்தார். ஆனால் தலைமை நீதிபதி இந்த கடிதத்தைப் பார்க்கும் முன்னரே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தமது விசாரணையையும் தொடங்கிவிட்டார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பதில் மனுதான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கேகேஎஸ்எஸ்ஆர் தரப்பு வாதம்: தற்போது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷே மனு சிங்வி முன்வைத்து வரும் வாதம்: நீதிபதிகளுக்கான வழக்குகளை தலைமை நீதிபதிதான் ஒதுக்க வேண்டும். ஆனால் தலைமை நீதிபதி வழக்குகளை ஒதுக்கும் வரை ஏன் தனிநீதிபதி ஆனந்த் வெங்கடேஷால் பொறுத்திருக்க முடியவில்லை? தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்குகளுக்கான நடைமுறைகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முறையாக பின்பற்றவில்லை. நடைமுறைகளை முறையாக பின்பற்றாத நீதிபதிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளும் செல்லத்தக்கவையாக இருக்காது என்ற விதிமுறைகள் இருக்கின்றன. தனிநீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஏன் இந்த வழக்குகளை அவசரம் அவசரமாக விசாரித்தார்?

உயர்நீதிமன்ற தரப்பு வழக்கறிஞர்: அமைச்சர்கள் மீதான வழக்குகளை தனி நீதிபதி தாமாக முன்வந்து விசாரிக்கும் நடவடிக்கைக்கு சென்னை உயநீதிமன்ற தலைமை நீதிபதி ஒப்புதல் வழங்கி உள்ளார்.

சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு: அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை யார் விசாரிப்பது என்பதை தலைமை நீதிபதி முடிவெடுப்பதுதான் சிறந்ததாகும். எந்த நீதிபதி முன் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்? அல்லது தலைமை நீதிபதியே விசாரிக்கலாமா? என்பதை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியே முடிவு செய்யலாம் என உத்தரவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+