அதானி விவகாரம்.. முழு வெளிப்படைத்தன்மை தேவை.. மத்திய அரசு யோசனையை நிராகரித்த உச்சநீதிமன்றம்
அதானி குழும மோசடிகள் தொடர்பான வழக்குகள் விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.
டெல்லி: அதானி குழும மோசடிகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் இன்று அதானி குழும மோசடிகள் தொடர்பான வழக்கில் குழு அமைப்பது தொடர்பாக உத்தரவை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

அதானி குழுமம் பங்கு சந்தையில் எப்படி எல்லாம் மோசடி செய்தது என்பதை அமெரிக்காவின் ஹிண்டர்பர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை அம்பலப்படுத்தியது. உலகம் முழுவதும் அதானி குழும விவகாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் அதானி குழுமம் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டது. பங்கு சந்தைகளில் அதானி குழுமத்தின் மதிப்புகள் வீழ்ச்சியடைந்தன. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அதானி கிடுகிடுவென வீழ்ச்சியை சந்தித்தார்.இதனால் அதானி குழுமம் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டது. பங்கு சந்தைகளில் அதானி குழுமத்தின் மதிப்புகள் வீழ்ச்சியடைந்தன. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அதானி கிடுகிடுவென வீழ்ச்சியை சந்தித்தார்.
அத்துடன் அதானி குழும மோசடிகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே பொதுநலன் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த பொதுநலன் வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரித்து மத்திய அரசுக்கும் பங்கு சந்தையை ஒழுங்குபடுத்தும் செபி அமைப்புக்கும் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இதனடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் செபி அமைப்பும் அறிக்கை தாக்கல் செய்தது. அதில், அதானி குழும மோசடிகள் குறித்து கண்காணித்து வருகிறோம் என தெரிவித்திருந்தது செபி.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஜெயா தாக்கூர் திடீரென உச்சநீதிமன்றத்தில் அதானி குழும மோசடிகள் தொடர்பாக விசாரிக்க கோரி புதிய மனுவைத் தாக்கல் செய்தார். இம்மனுவை தலைமை நீதிபதி சந்திரசூட், நரசிம்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணைக்கு ஏற்றது.
இதனிடையே உச்சநீதிமன்றத்தில் அதானி குழுமத்துக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. முகேஷ் குமார் என்பவர், அதானி குழுமத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். அதானியின் பங்கு சந்தை மோசடி குறித்து உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று முகேஷ் குமார் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் அதானி குழும மோசடிகள் தொடர்பாக தொடரப்பட்ட 4-வது வழக்கு இது. அதானி குழுமத்துக்கு எதிரான முகேஷ்குமார் வழக்கில் காங்கிரஸ் கட்சியின் சட்டப் பிரிவு தலைவர் பதூரியா ஆஜராக உள்ளார். இந்த வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் விசாரணை நடத்தியது.

அப்போது சீலிட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்யத் தயார் என்ற மத்திய அரசு கூறிய நிலையில், மத்திய அரசின் யோசனையை தலைமை நீதிபதி நிராகரித்தார். இவ்விவகாரத்தில் முழு வெளிப்படைத்தன்மையை உச்ச நீதிமன்றம் விரும்புகிறது என்றும் அவர் கருத்து தெரிவித்தார். மேலும் நிபுணர் குழுவின் பெயர்களை சுப்ரீம் கோர்டே பரிந்துரைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றம் அமைக்கும் வல்லுநர் குழுவுக்கு அனைத்து துறை அதிகாரிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்ற நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications