பணமதிப்பிழப்பிற்கு எதிரான வழக்கு! ஜன.2இல் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.. இதுவரை விசாரணையில் நடந்தது என்ன
டெல்லி: பணமதிப்பிழப்பு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் அனைத்து வாதங்களும் நிறைவடைந்துவிட்டன. இதற்கிடையே இந்த வழக்கில் வரும் ஜனவரி 2ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016இல் பணமதிப்பு நீக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அப்போது ஒரே இரவில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதாவது புழக்கத்தில் இருந்த 85% நோட்டுகள் ஒரே நேரத்தில் செல்லாது என அறிவிக்கப்பட்டது. கருப்புப் பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக முதலில் சொல்லப்பட்டது. இருப்பினும், இதற்கு எதிராக சுப்ரீம் கோர்டில் பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

ஜன.2ஆம் தேதி தீர்ப்பு
நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது. இந்த வழக்கில் வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்திருந்த நிலையில், தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்திருந்தது. இதனிடையே இந்த வழக்கில் வரும் ஜனவரி 2ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரிக்கும் நீதிபதி அப்துல் நசீர் ஜன.3ஆம் தேதி ஓய்வு பெற உள்ள நிலையில், அதற்கு ஒரு நாள் முன்னதாக பணமதிப்பிழப்பு குறித்து அவர் தீர்ப்பை அளிக்க உள்ளார்.

வாதங்கள்
இந்த அரசியலமைப்பு அமர்வில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், ஏ.எஸ். போபண்ணா, வி. ராமசுப்ரமணியன், மற்றும் பி.வி. நாகரத்னா ஆகியோர் உள்ளனர். கடந்த டிச.7ஆம் தேதி உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தனது தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது. அப்போது நீதிமன்றம் 2016இல் அறிவிக்கப்பட்ட இந்த பணமதிப்பிழப்பு கொள்கை தொடர்பான அனைத்து ஆவணங்கள் சமர்ப்பிக்குமாறு மத்திய மற்றும் ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டது. அனைத்து பதிவுகளும் சீல் வைக்கப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்படும் என அட்டர்னி ஜெனரல் அப்போது கூறியிருந்தார்.

ப சிதம்பரம்
இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும், முன்னாள் நிதியமைச்சருமான ப சிதம்பரம், பணமதிப்பிழப்பு அறிவிப்பிற்கு எதிராகக் கடுமையான வாதங்களை முன்வைத்தார். பணமதிப்பிழப்பு அறிவிப்பில் அரசு பின்பற்றிய செயல்முறை குறைபாடுடையது என்றும் அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் அவர் வாதிட்டார். மத்திய அரசின் இந்த நடவடிக்கை சட்டத்தைக் கேலிக்கூத்தாக்கியுள்ளது என்று தனது வாதத்தில் குறிப்பிட்டார். ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின் அடிப்படையில் தான் பணமதிப்பிழப்பு செய்ய அரசுக்கு அதிகாரமும் உள்ளது என்று குறிப்பிட்ட அவர், அதற்குப் பதிலாக இங்கு தலைகீழான நடைமுறை பின்பற்றப்பட்டதாகவும் வாதிட்டார்.

மத்திய அரசு
இந்த வழக்கு விசாரணையில் ரிசர்வ் வங்கி பணமதிப்பிழப்பின் போது, சில கஷ்டம் இருந்ததை ஒப்புக்கொள்வதாகவும் இருப்பினும், அவை தேசத்தைக் கட்டியெழுப்பும் செயல்பாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் தெரிவித்தது. அதேபோல மத்திய அரசு தனது பிரமாணப் பத்திரத்தில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை நன்கு பரிசீலிக்கப்பட்ட முடிவு என்றும், போலி ரூபாய் நோட்டுகள், பயங்கரவாத நிதி செல்வது, கருப்புப் பணம் மற்றும் வரி ஏய்ப்பு ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியே இந்த பணமதிப்பிழப்பு என வாதிட்டது. அதேபோல பொருளாதார ரீதியாக இந்தியாவுக்கு நல்ல பலன்கள் இருந்ததாகவும் இதனால் பணமதிப்பிழப்பைத் தோல்வி எனக் கருத முடியாது என்றும் கூறியிருந்தது.
-
CJP: 'ஜெய் பீம்' மொமென்ட்.. இந்தியாவில் கால் வைத்ததும் அபிஜீத் திப்கே செய்த வேலை.. ஷாக்! -
கரப்பான் பூச்சிகளின் போராட்டத்தில் இணைந்த AISA, SFI மாணவ இயக்கங்கள்.. மத்திய அரசுக்கு நெருக்கடி!! -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
இளைஞர்கள் இனி பயப்பட மாட்டார்கள்.. மத்திய அரசை விளாசிய ஆப்ஜித் தீப்கே! டெல்லி ஜந்தர் மந்தரில் ஆவேசம் -
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
ஆம் ஆத்மி கட்சியில் 3 ஆண்டுகள் பயணம்.. காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்! யார் இந்த ஆப்ஜித் தீப்கே? -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications