டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேரளா, மகாராஷ்டிராதான் இதற்கெல்லாம் காரணம்... சுப்ரீம் கோர்ட்டில் புட்டு வைத்த மத்திய அரசு!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் 10 மாநிலங்களில் மட்டும் 77% கொரோனா கேஸ்கள் உள்ளதாக மத்திய அரசு சுப்ரிம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.

உலக நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

கொரோனாவை தடுக்க சிறப்பான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருவதாகவும் கோர்ட்டில் மத்தியஅரசு தெரிவித்துள்ளது.

 இது கொரோனா ஆட்டம்

இது கொரோனா ஆட்டம்

ஒரு ஆண்டுக்கும் மேலாக இந்தியாவில் தனது ஆட்டத்தை விளையாடி வரும் கொரோனவை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. தமிழகம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் குறைந்தாலும், தலைநகர் டெல்லி, மகாராஷ்டிரா, நமது அண்டை மாநிலம் கேரளா ஆகிய இடங்களில் கொரோனா அடங்காமல் தலைவிரித்தாடுகிறது.

 அஜாக்கிரதை

அஜாக்கிரதை

சில மாநிலங்களில் பண்டிகை காலத்தில் மக்கள் அஜாக்கிரதையாக இருந்து விட்டதே கொரோனா மீண்டும் அதிகமாக பரவியதற்கு கரணம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா கட்டுபாட்டில் உள்ளதாக மத்திய அரசு சுப்ரிம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கில் கோர்ட்டில் பிரமாண தாக்கல் செய்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம் அதில் கூறியுள்ளதாவது:-

 ஆக்டிவ் கேஸ்கள் குறைவு

ஆக்டிவ் கேஸ்கள் குறைவு

நவம்பர் 24 நிலவரப்படி அதுவரை இந்தியாவில் 9.2 மில்லியன் கொரோனா கேஸ்கள் உள்ளன. 44,௦௦௦ ஆக்டிவ் கேஸ்கள் மட்டுமே உள்ளன. இது மொத்த பதிப்பில் 4.5% மட்டுமே. நாட்டில் இதுவரை 8.6% மில்லியன் மக்கள் குணமடைந்துள்ளனர். ரிக்கவரி விகிதம் 93.76% ஆக உள்ளது. கடந்த 8 வாரங்களில் 50,௦௦௦% கீழ் தினசரி பாதிப்பு குறைந்துள்ளது.

 கேரளா மோசம்

கேரளா மோசம்

மகாராஷ்டிரம், கேரளம் ஆகிய 2 மாநிலங்கள் மட்டுமே 50,000 மேல் பாதிப்புகளை பெற்றுள்ளது. இது ஒட்டுமொத்த அளவில் 33 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது. பத்து மாநிலங்களில் மட்டும் கிட்டத்தட்ட 77 சதவீதம் ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. மகாராஷ்டிரா (18.9%), கேரளா (14.7%), டெல்லி (8.5%), மேற்கு வங்கம் (5.7%), கர்நாடகா (5.6%), உத்தரபிரதேசம் (5.4%), ராஜஸ்தான் (5.5%), சத்தீஸ்கர் (5.0) %), ஹரியானா (4.7%), ஆந்திரா (3.1%) மாநிலங்கள் ௭௭ சதவீதம் ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன .

 இந்தியா பரவாயில்லை

இந்தியா பரவாயில்லை

பெரும்பாலான நாடுகளில் கொரோனா உயர்ந்து வருகிறது. இந்தியாவில் சிறப்பான நடவடிக்கை மூலம் தொற்று குறைந்து வருகிறது. உலகளாவிய சராசரி 2.36% ஒப்பிடும்போது இந்தியாவின் இறப்பு விகிதம் 1.46 சதவீதமாக குறைவாக உள்ளது. இது மொத்த இறப்பு எண்ணிக்கையில் 0.13 மில்லியன் ஆகும்.

 குறைத்து வருகிறோம்

குறைத்து வருகிறோம்

இறப்பு விகிதத்தை 1 சதவீதத்திற்கும் குறைவாகக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை அரசு செய்து வருகிறது. இந்தியாவில் தற்போது சராசரியாக தினசரி 1.1 மில்லியன் மாதிரிகளை சோதித்து வருவதாகவும், ஏப்ரல் தொடக்கத்தில் இது 6 ஆயிரமாக இருந்ததாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. ஆரோக்ய சேது / ஐடிஹாஸ் போன்றவற்றின் மூலம் தொடர்புகளை கண்டறிந்து பாதிப்பை குறைத்து வருவதாகவும் அரசு தெரிவித்துளளது. கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் தொடர்ந்து பலப்படுத்தப்பட்டு வருகிறது.

 13.38 கோடி மாதிரி

13.38 கோடி மாதிரி

நவம்பர் 23 நிலவரப்படி அரசு ஆய்வகங்கள் 1166 என்றும், கூடுதலாக, கோவிட் -19 சோதனைக்கு 968 தனியார் ஆய்வகங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன என்றும் மொத்தம் 133.8 மில்லியன் (13.38 கோடி) மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. நவம்பர் 24 ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 15,454 சிகிச்சை வசதிகள், 1,54,698 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கை (2, 67, 886 ஆக்ஸிஜன் ஆதரவு படுக்கைகள் உட்பட) வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.மேலும், இதில 79,005 அவசர சிகிச்சை அளிக்கும் படுக்கைகள் (40,183 வென்டிலேட்டர் படுக்கைகள் உட்பட) ஏற்படுத்தபட்டுளளதாகவும் உள்துறை கூறியுள்ளது.

English summary
The federal government has told the Supreme Court that 77% of coronavirus cases are in 10 states in India alone
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X