ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு- கொந்தளித்து போன துணை ஜனாதிபதி!
டெல்லி: தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் ஜனாபதிக்கு எதிராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளதற்கு துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நாட்டின் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கும் ஜனாதிபதிக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியுமா? என்று கேள்வி எழுப்பிய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், நீதிபதிகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பேசியதாவது: இந்த நாட்டின் ஒரு குடிமகனாக, பொறுப்புமிக்க பதவியில் இருக்கிற நான், சட்டத்தின் ஆட்சியை நாம் நீர்த்து போகச் செய்கிறோமா? என்கிற கேள்வியை எழுப்புகிறோம். மக்களாகிய நாம் என்கிற அரசியல் சாசனத்துக்கு நாம் பதில் சொல்ல வேண்டாமா?
சட்டம் சார்ந்த நடவடிக்கைகளை நாடாளுமன்றம்தான் எடுக்க வேண்டும். நாட்டில் இருப்பது உச்சநீதிமன்றம்தானா? அல்லது சூப்பர் பவர் கொண்ட நாடாளுமன்றமா?
நாட்டின் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கக் கூடிய அதிகாரம் படைத்தவர் ஜனாதிபதிதான். தற்போது ஜனாதிபதிக்கே நீதிபதிகள் உத்தரவிடுகின்றனர். அதெப்படி ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றமானது உத்தரவிட முடியும்? ஜனாதிபதி பத எபது மிக மிக உயர்ந்தது. மதிப்புக்குரியது; இந்த நாட்டின் சட்டங்கள் தங்களுக்குப் பொருந்தாது என நீதிபதிகள் நினைக்கின்றனர். இந்த நாடு எதனை நோக்கிச் செல்கிறது?
இந்த நாட்டில் பிரதமர் மீது கூட வழக்கு பதிவு செய்யலாம்; ஆனால் நீதிபதிகள் மீது வழக்கு பதிவு செய்ய முடியாது? ஜனாதிபதியை உச்சநீதிமன்றம் வழிநடத்துகிற சூழ்நிலையை நாம் அனுமதிக்க முடியாது. உச்சநீதிமன்றத்துக்கான சிறப்பு அதிகாரம் 142-ஐ, ஜனநாயகத்துக்கு எதிரான அணு ஏவுகணையாகவே பயன்படுத்துக்கின்றனர். இவ்வாறு ஜக்தீப் தன்கர் விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications